Photos
Videos
கணனி பாவனையாளர்களுக்கு...
912
149
பாட்டியின் கைவைத்தியம்.. நம்பமுடியாத அதிர்ச்சி!.
844
116
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் தின வாழ்த்துக்கள்.
665
61
Posts

ஒரு நோய் இன்ன காரணியால் தான் வருமென்ற ஒரு தந்தையின் பொதுப்புத்தி ஒரு குழந்தைக்கு எவ்வளவு மன வருத்தங்களைத் தருமென இப்படம் அழகாகப் பதிந்துள்ளது.

ஒரு நோய் என்பது இந்தச் சமூகத்தில் நோய் மட்டுமல்ல என்பது எவ்வளவு ஆபத்தான முட்டாள்த்தனமான புரிதல். அதில் குடும்பப் பெருமை, சமூகக் கெளரவத்தை எல்லாம் பொருத்திப் பார்ப்பது அபத்தத்திலும் அபத்தம்.

அரவணைப்பும் நம்பிக்கையுமே குணமாதலுக்குப் பிரதானம். மருந்து இரண்டாம் பட்சம்தான்!

... See More

“இந்தச் சமூகம் என்ன சொல்லுது? நீ என்ன வேணா வேலை செய். எவனை வேணா சுரண்டித் தின்னு; காக்கா பிடி; அடிமையாயிரு; ஊழல் பண்ணு; லஞ்சம் வாங்கு; குத்து, அடி, மிரட்டு, கொல...ை பண்ணு, ரேப் பண்ணு, எத்தனை பேர் வயித்துல வேணாலும் மிதி; எவ்ளோ பேரை வேணாலும் முட்டாளாக்கு; பல்லாயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான பணத்தை வேணா கொள்ளையடி – யாரும் உன்னைத் தூக்கிப் போட்டு மிதிக்க மாட்டாங்க; இங்க ஒரே ரூல் தான். பணம் சம்பாதிச்சா இந்தச் சமூகம் உன்னை மதிக்கும், பணம் சம்பாதிக்கலைன்னா இந்தச் சமூகம் உன்னை மதிக்காது” என்ற இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனின் வரிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார் நாயகி அதிதி பாலன். இது தனது முதற்படமென இயக்குநர் கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாது. அப்படியொரு படமிது!

See More
அருவியில் நனைவது போல் சிலர்ப்பூட்டும் விஷயம் வேறு ஏதேனும் உண்டா? அதன் அழகில் மயங்கி, கீழ் நோக்கிப் பாய்ச்சலாய்...
ithutamil.com

மெல்லோட்டம் செய்வதால் கிடைக்கும் பயன்கள்

மெல்லோட்டத்தை ஆங்கிலத்தில் ஜாகிங் (Jogging) என்பார்கள்.

விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான ஓட்டமாகும்.

...

இந்த மெல்லோட்டத்தை ஆண், பெண் இருபாலரும் மேற்கொள்ளலாம். மெல்லோட்டம் செய்ய காலை நேரமே சிறந்தது.

மெல்லோட்டம் பயிற்சியில் ஈடுபடும் முன் பருத்தியினாலான இறுக்கமில்லாத ஆடைகளை அணிந்துகெள்ள வேண்டும். ஆரம்பத்தில் 1/2 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது. அதுபோல் 50 வயதைக் கடந்தவர்கள் 5 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது.

இரத்த அழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்று ஓடலாம். தினமும் செய்யாமல் ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.

மெல்லோட்டத்தால் ஏற்படும் நன்மைகள்…….

· மன அழுத்தம், மன எரிச்சல் நீங்குகிறது.

· நுரையீரலுக்கு போதுமான ஆக்ஸிஜனைப் பெற்று இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

· இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது.

· உடலின் எடை சீராக வைக்கப்படுகிறது.

· இதயத் தசைகள் வலுவாக்குகிறது.இதயம் சுருங்கி விரியும்போது இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது.

· உடலின் தசைகள் வலுப்பெறுகிறது.

· எலும்புகளில் உள்ள சுண்ணாம்புச்சத்து குறைவைத் தடுத்து எலும்புகளை பலப்படுத்துகிறது.

· நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

· என்றும் இளமைப் பொலிவோடு இருக்க உதவி செய்கிறது.

முதுமையைத் தள்ளிப்போட வைக்கிறது. மெல்லோட்டம் சிறந்த உடற்பயிற்சியாகும். இதனை கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம்.

See More
Image may contain: one or more people, ocean, twilight, sky, outdoor, water and nature
Posts

முகத்தில் கரும்புள்ளிகளைப் போக்கும் மாஸ்க் மருத்துவம்

மூக்கின் ஓரங்களில் தங்கியுள்ள கரும்புள்ளிகளை தேய்த்து தேய்த்து சோர்ந்து விட்டீர்களா? அப்படியெனில், அதனைப் போக்க வேறு என்ன வழி உள்ளது என்று யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

சரி, இந்த கரும்புள்ளிகள் எப்படி வரு கிறதென்று தெரியுமா? சருமத்துளைகளானது எண்ணெய், அழுக்குகள் மற்றும் இறந்த செல்களால் அடைக்கப்படுகிறதோ, அப் போது தான் கரும்புள்ளிகள் உருவாகின்றன. பொதுவாக இந்த கரும்புள்ளிகள் மூக்கு, தாடை, நெற்றி மற்றும் கன...்னங்களில் அதிகம் காணப்படும்.

ஏனெனில் அந்த இடங்களில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பிகள் இருப்பதால், அந்த பகுதிகளில் அதிகம் ஏற்படுகிறது. எனவே தான் முகத்திற்கு அவ்வப்போது மாஸ்க், ஸ்கரப் போன்றவற்றை மேற்கொள்வது இன்றியமையாததாக உள்ளது.

அதற்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி ஸ்கரப் செய்ய வேண்டாம். வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களைக் கொண்டு, அருமையான முறையில் கரும் புள்ளிகளை போக்கலாம். இப்போது முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்குவதற்கு எப்படியெல்லாம் ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும் என்று பார்ப்போம்.

ஓட்ஸ் :

ஓட்ஸ் பவுடரை பாலில் கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால், கரும் புள்ளிகளானது எளிதில் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகள் நீங்கிவிடும்.

தயிர் :

தயிரில் தேன் மற்றம் கடலை மாவு சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, 5 நிமிடம் ஊற வைத்து, நன்கு காய வைத்து, தண்ணீர் ஊற்றி மீண்டும் ஸ்கரப் செய்ய வேண்டும்.

எலுமிச்சை :

எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை அதிகம் இருப்பதால், அதனைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் பசையுடன், கரும்புள்ளிகளும் நீங்கிவிடும். மேலும் முகமும் வெள்ளையாகும்.

ஆரஞ்சு தோல் :

ஆரஞ்சு தோலை நன்கு உலர வைத்து, பொடி செய்து, அதனை பால் மற்றும் தேனுடன் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, முகத்தை ஸ்கரப் செய்து, உலர விட்டு கழுவினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

பேக்கிங் சோடா :

பேக்கிங் சோடாவும் ஒரு சூப்பரான கரும்புள்ளியைப் போக்கும் பொருள் தான். அதற்கு பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, ஈரமான முகத்தில் அதனைக் கொண்டு மசாஜ் செய்தால், கரும்புள்ளிகளுடன் முகப்பருக்களும் நீங்கி விடும்.

See More
Image may contain: 1 person, smiling

குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனிக்க வேண்டியவை

காது குத்தும் இடம் சுத்தமானதாக இருக்கிறதா என்று
நாம் உறுதிசெய்ய வேண்டும். ஏனென்றால்
குழந்தைகளின் உடலில் நோய்எதிர்ப்பு சக்தி...
குறைவாகவே காணப்படும்.

காது குத்துவது சரியாக செய்யப்படவில்லை என்றால்
அது குழந்தைகளுக்குஅதிகமான வலியை ஏற்படுத்தும்.

காது குத்தும் இடத்தை தரமான ஆண்டிசெப்டிக்கை
பயன் படுத்தி கழுவவும். குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல் தோடுகளை இழுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அது அவர்களுக்கு மிகுந்தவலியினை கொடுக்கும்.

காது குத்திய முதல் நான்கிலிருந்து ஐந்து மாதத்திற்கு
குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல்,
தோடுகளை தொடர்ச்சியாக அணிய வேண்டும்.

காது குத்தும் கருவி சுத்தமானதாக இல்லை என்றால்
காதுகுத்தப்பட்ட இடத்தில் கிருமிகள் தாக்க அதிக
வாய்ப்புள்ளது.

அவர்கள் அணியக்கூடிய காதணிகள் தரமானதாக
இல்லை என்றாலும் இது போன்று கிருமிகள் தாக்க
வாய்ப்புள்ளது.

உங்கள் குழந்தைக்கு இரும்பு போன்றவற்றினால்
அலர்ஜி ஏற்படுமானால் அந்த அலர்ஜி, இது போன்ற
காதணிகள் அணிவதால் உங்கள் குழந்தையை பாதிக்கலாம்.

குழந்தைகளின் காதணிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

சில நேரங்களில், காது குத்திய இடத்தில் சிறிய தழும்புகள் வரவாய்ப்புகள் உள்ளது. இது சில நாட்களில் தானாகவே நீங்கிவிடும். ஆனால் இது கூட பலபெரும் பிரச்சனைக்கு காரணமாக அமையலாம். பெரும்பாலும் காது குத்தும் இடங்களில் கட்டி இருந்தால் இந்த பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். அதனால் காது குத்தும் போது கட்டி இருந்தால் அந்த இடத்தைத் தவிர்ப்பது நல்லது. குழந்தை மருத்துவமனைகளில் இதனை செய்வது நல்லது.

See More
Image may contain: 1 person, sitting

நெஞ்செரிச்சல் பிரச்சினையா?

நார்சத்து உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள்..!

சிலர் நெஞ்செரிச்சல் அல்லது எதுக்களிப்பு பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். வயிற்றுப் பகுதி அமிலங்களில் ஏற்படும் மாற்றங்களால் ஜீரணக் கோளாறு உண்டாகிறது. இது மாதிரி நிலையில் அமிலங்களுடன் உணவுக்குழாய் நெருங்கி வரும் போது எதுக்களிப்பு சிக்கல் உண்டாகிறது. அதன்பிறகு எது சாப்பிட்டாலும் மேலே வருவது போலவும், கூடவே நெஞ்செரிச்சலும் இருக்கும். இது மாதிரி நிலையில் நார்சத்து நன்றாக கைகொடுக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். (ஏ...ற்கனவே பெருங்குடல் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் நீரழிவு ஆகியவற்றை தடுப்பதில் நார்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.) கூடவே கொழுப்பையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.

நெஞ்செரிச்சலால் அவதிப்படுபவர்களுக்கு டெஸ்ட் எடுத்துப் பார்த்த போது ஒட்டுமொத்த கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாக இருந்தது. உடல் பருமனும் எதுக்களிப்பை தூண்டி விடும் மற்றொரு சிக்கலான காரணி தான். இந்நிலையில் உணவில் இடம்பெறும் ஒட்டுமொத்த கொழுப்பின் அளவை குறைத்து, நார்ச்சத்தை அதிகப்படுத்தும் பட்சத்தில் எதுக்களிப்பு அறிகுறிகள் கணிசமாக குறைவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் நார்சத்து அதிகமாக காணப்படுகிறது.

எதுக்களிப்பு பிரச்சினையை கண்டு கொள்ளாமல் சும்மா இருந்தால், அல்சர், உணவுக் குழாய் பாதையில் ரத்தக்கசிவு ஆகியவை ஏற்படும். நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றால் உணவுக்குழாய் பாதையில் புற்றுநோய் வரும் ஆபத்தும் உள்ளது. ஆகையால் நெஞ்செரிச்சல் வியாதிக்காரர்கள் உணவில் கொழுப்பை குறைத்து, நார்சத்தை அதிகமாக சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும்.

See More
Image may contain: fruit and food

கர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை!!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் மருத்துவர்களே, இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமென்றும் பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிகள் முதல் மூன்...

Continue Reading
Image may contain: 3 people, people standing

வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்

வாயுத் தொல்லை! இந்தப் பிரச்சினை இல்லாத மனுஷங்களே இருக்க முடியாது. எத்தனை பெரிய ஆளா இருந்தாலும், தர்மசங்கடத்துல தர்ற பிரச்சினை இது.

ஒருத்தர் ஒரு நாளைக்கு ஆசன வாய் வழியா 14 முறை வாயுவை வெளியேத்தறது சாதாரணமானதுன்னு சொல்றாங்க மருத்துவர்கள்.

...

இந்த வாயுத் தொல்லை ஏன் வருது?

உணவு செரிமானமாகி, வயித்துலேர்ந்து சிறுகுடலுக்குப் போகும். மீதி உணவு பெருங்குடலுக்குத் தள்ளப்படும். அந்த மிச்ச உணவில் ஆபத்தில்லாத பாக்டீரியா கிருமிகள் நிறைய இருக்கும். மிச்ச மீதி உணவோட, அந்த பாக்டீரியா சேர்ந்து, உணவு புளிச்சு, வாயுவா மாறுது. இந்த வாயுவில் நாற்றம் இல்லாதவரைக்கும் பிரச்சினை இல்லை. நாற்றமும் சத்தமும் அதிகமானா, அது ஏதோ உடல்நலக் கோளாறுக்கான அறிகுறினு எடுத்துக்கலாம். அதை சாப்பாடு மூலமா சரி செய்யலாம்.

அதுக்கு முன்னாடி வாயுவை உற்பத்தி பண்ற உணவுகளைப் பத்திப் பார்க்கலாம். அளவுக்கதிகமாக வாயுவை உற்பத்தி செய்கிற உணவுகள், மிதமான வாயுவை உற்பத்தி பண்ற உணவுகள், குறைந்த வாயுவை வெளியேத்தற உணவுகள்னு மூணு வகை. முதல் வகைல பால் மற்றும் பால் பொருள்கள், பிராக்கோலி, காலிஃப்ளவர், குட்டி முட்டைகோஸ், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம், சோயா பீன்ஸ், டர்னிப், சோளம், உருளைக்கிழங்கு, ஓட்ஸ், கோதுமை. இரண்டாவது வகைல ஆப்பிள், வாழைப்பழம், கேரட், கத்தரிக்காய், செலரி மற்றும் பிரெட். கடைசி வகைல முட்டை, மீன், ஆட்டிறைச்சி, எண்ணெய், அரிசி.

வாயுத் தொல்லையிலிருந்து தப்பிக்க என்ன வழி?

சமைச்ச உணவு சாப்பிடறப்ப கூடவே பச்சைக் காய்கறி, பழங்களை சாப்பிடக் கூடாது. பழம், பச்சைக் காய்கறி சாப்பிட்டு, கொஞ்ச இடைவெளி விட்டு, அப்புறம் சமைச்ச உணவை எடுத்துக்கிறது நல்லது. காய்கறி, பழங்களில் நார்ச்சத்து அதிகம். அது சமைச்ச உணவோட சேர்ந்து சீக்கிரம் செரிச்சு, புளிச்சு, வாயுவை உண்டாக்கும்.

சில பேர் அவசரம் அவசரமா சாப்பாட்டை விழுங்குவாங்க, அப்ப காற்றையும் சேர்த்து விழுங்கறதும் வாயுவுக்கான காரணம். மலச்சிக்கல் இன்னொரு காரணம், தினம் காலை எழுந்ததும் மலம் கழிக்கிறதைப் பழக்கப்படுத்திக்கிறவங்களுக்கு வாயுத் தொல்லை குறைவு.

சாப்பிட்ட உடனேயே வாயு வெளியேறாது. 3 முதல் 5 மணி நேரத்துக்குப் பிறகுதான் வரும். வாயுவுக்கு எதிரா போராடுற குணம் கொண்ட உணவுகள் பூண்டு, இஞ்சி, சோம்பு, ஓமம். வாயு அதிகம்னு தெரிஞ்ச உணவுகள்ல இதையெல்லாம் சேர்த்து சமைக்கிறப்ப, பிரச்சினை குறையும்.

சுண்டல் சாப்பிட்டா வாயுப் பிரச்சினை வரும். சுண்டலுக்கான தானியத்தை ஊற வச்சிட்டு, அந்தத் தண்ணியை வடிச்சு, வேற தண்ணி மாத்தி, கொஞ்சம் இஞ்சி சேர்த்து பிரஷர் குக் செய்யலாம். இல்லைனா சுண்டலுக்கான கடலையை வெறும் கடாய்ல லேசா வறுத்துட்டு, இளம் சூடான தண்ணீர் விட்டு ஊற வச்சு, வடிச்சு வேக வச்சும் செய்யலாம். முக்கியமா அதோட மேல் தோல் உடையற அளவுக்கு வேக வைக்கணும்.

பழகாத எந்தப் புது உணவையும் ஒரே நாள்ல நிறைய சாப்பிடாம, கொஞ்சம் கொஞ்சமா முயற்சி பண்றதும் நல்லது. பார்ட்டி, விசேஷம்னு முதல்நாள் நிறைய சாப்பிட்டவங்களுக்கு, அடுத்த நாள் வாயுப் பிரச்சினை அதிகமாக இருக்கும். பசியிருக்காது. அந்த நேரத்துல இஞ்சி முரபா, இஞ்சி சிரப், இஞ்சி சூரணம்னு எதையாவது எடுத்துக்கிறது உடனடி பலன் தரும்.

கிழங்கு சாப்பிட்டா முதுகு பிடிச்சிருச்சு, கடலை சாப்பிட்டா கை, கால் பிடிச்சிருச்சு, வாயுனு சொல்றவங்களை நிறைய பார்க்கலாம். உண்மைல வாயுங்கிறது வயித்துப்பகுதில மட்டும்தான் இருக்கும். முதுகுப் பிடிப்பு மாதிரி மத்த பிரச்சினைகளுக்கு காரணம் வேற ஏதாவது இருக்கலாம்.

See More
Image may contain: food

கருப்பா இருந்தாலும் களையாக இருக்கணுமா?

கருப்பான சருமம் என்பது இந்தியர்களை பொருத்தவரை இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்படுகிறது.

இதற்கு காரணம் சிவந்த மேனி கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமைதான். கருப்பு என்பது வெறுக்கத்தக்க நிறமில்லை.

...

இந்தியர்களின் உண்மை நிறமே கருப்புதான். கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம்.

ஏனெனில் அவர்களுக்கு வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கொப்புளங்கள், கோடைகால சரும பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. கருப்பான பெண்கள் கலையாக மாற சில ஆலோசனைகளை பார்க்கலாம்……

சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம். இதனால் கருப்பான சருமம் களையாகும்.

ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு தடவி வர வேண்டும். இவ்வாறு தடவிய பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து மீண்டும் தடவ வேண்டும்.

இதனால் முகம் நிச்சயம் பொலிவாகும். வெயிலில் வாகனங்களில் செல்கிற போது ‘சன் ஸ்கிரீன்’ உபயோகிக்கலாம். அதேபோல் கைகளுக்கு தற்காப்பு கவச துணி அணிவது சருமத்தை பாதுகாக்கும்.

சூடான பாலில் குங்குமப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பது தான் பலன் தரும். இதனால் சரும நிறத்தில் பொலிவு கூடும்.

அதேபோல் பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

See More
Image may contain: 1 person, sitting and indoor

அளவுக்கு மீறினால் காபியும் நஞ்சு

மெட்ராஸ் ஃபில்டர் காபி, கும்பகோணம் டிகிரி காபி, டிக்காக்ஷன் காபி, வடிகட்டாத எஸ்ப்ரஸ்ஸோ காபி, இன்ஸ்டன்ட் காபி, மைசூர் - மங்களூர் காபி, பிளாட்பாரக் காபி என்று காபிகள் பல ரகம்.

இந்தக் காபியைக் கண்டுபிடித்தது நோபல் விஞ்ஞானிகள் அல்ல. காபி நிறத்தில் ஓர் இடையர். முன்னொரு காலத்தில் அபிசீனியா நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கால்தி என்பவர். அவர் மேய்த்துச் சென்ற ஆட்டு மந்தை காட்டில் எதையோ தின்றுவிட்டு அதிக உற்சாகத்துடன் துள்ளி ஓடி ஆடி நடந்தன...

Continue Reading
Image may contain: drink and indoor

குண்டுக் குழந்தை ஆரோக்கியமல்ல!

உலகம் முழுவதுமே குண்டுக்குழந்தைகள் அதிகரித்து வருகிறார்கள்.

வளர்ந்த நாடுகளில் உள்ள குழந்தைகள் சோம்பலான வாழ்க்கையைப் பின்பற்றுவதால் குண்டுக் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

...

6 முதல் 19 வயதுள்ள குழந்தைகளில் 16 சதவீதம் குழந்தைகள் குண்டாக உள்ளனர்.

மலேசியாவில் கடந்த இரண்டு வருடங்களில் குண்டுக்குழந்தைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

இதே நிலை தொடர்ந்தால் ஒவ்வொரு 4 வருடத்திற்கு ஒரு முறை இரு மடங்காக அதிகரிக்கும்.

குண்டுக்குழந்தைக்கு இதய நோய், ரத்த அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம். இது குறித்து ஒரு ஆய்வு நம் நாட்டில் நடத்தப்பட்டது.

அதன் படி குழந்தைகளின் உயரம், எடை, ரத்த அழுத்தம், அளவிடப்பட்டதில் 15 சதவீத குழந்தைகள் மிகக் குண்டுக் குழந்தைகளாக இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. ஆய்வில் அதிர்ச்சி தகவல்களும் உண்டு.

பெண் குழந்தைகள் 10 வயதுக்கு முன்னே பருவம் அடைந்து விடுகிறார்கள். ஆண் குழந்தைகளின் ஆணுறுப்பு வளர்ச்சியில்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குண்டு ஆண் குழந்தைகளுக்கு பெண்களைப்போல் மார்பகம் பெரிதாகிறது.

அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பள்ளிப்படிப்பு பாதிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கோ பின்னாளில் கர்ப்பப்பை நோய்களும், எலும்புத் தேய்மானமும், மலட்டுத்தன்மையும், மாதவிடாய் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. அதனால் குண்டுக் குழந்தை ஆரோக்கியம் அல்ல.

See More
Image may contain: 1 person, baby

பிஸ்தா பருப்பு !

இளமையும், ஆரோக்கியமும் இருக்கும் வரையே நம்மால் புத்துணர்ச்சியாக இருக்க முடிகிறது. அதே நேரம் முதுமையின் ஆரம்பக் கட்டத்தை நெருங்கும் பொழுதும்,

நோய்வாய் படும்பொழுதும் புத்துணர்ச்சி குறைய ஆரம்பிக்கிறது. இளமைக்காலத்தில் கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வந்த உடலானது முதுமையை நெருங்கும் பொழுது செல்களின் பல்முறை பெருக்கம் குறைந்து, செல் அழிவை சந்திக்க நேரிடுகிறது.

...Continue Reading
Image may contain: food

பற்பசையில் விஷம்

பள்ளிக்குச் செல்லும் பருவத்தினரில் தொண்ணூறு சதவிகிதத்தினர் டென்டல் கேரிஸ் எனப்படும் சொத்தைப் பற்களாலும் ஈறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். அதை விட அதிகமாக வாய் நாற்றம், வயிற்றுப் பூச்சித் தொல்லை, அடிக்கடி மலம் கழிப்பது போன்ற சுகாதாரப் பிரச்னைகளால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பல பள்ளிகளில் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. ஐந்து, ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பல்துலக்கும்போது பற்பசையை விழுங்கி விடுவதுண்டு. இதுதான் உடல்நலத...்திலும் பற்களின் நலத்திலும் கேடு விளைவிக்கிறது. ஏனென்றால் பற்பசைகளில் ப்ளோரைடு என்ற ரசாயனப்பொருள் கலந்திருப்பதாக ‘நேஷனல் ட்ரிங்கிங் வாட்டர் மிஷன்’ என்ற தேசிய குடிநீர் பராமரிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

பற்சிதைவைத் தடுப்பதற்காகத்தான் இந்த ரசாயனம் பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது. ஆனால், குழந்தைகள் இதை உட்கொள்ளும்போது, உடல்நலத்தையே பாதிக்கக் கூடிய வகையில் இது செயல்படுகிறது. பற்பசைகளில் மட்டுமல்லாது, சில பகுதிகளில் குடி நீரிலும் ப்ளோரைடு அதிகம் கலந்துள்ளது. இதனால் இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா, கேரளா, ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வாழும் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. ப்ளோரைடு சம்பந்தமான நோய்களால் இந்தியாவில் இரண்டரை கோடி பேர் பாதிக்கப் பட்டுள்ளனராம். பற்சிதைவை குணப்படுத்த ப்ளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்தும் மக்கள், அதைத் தவிர்த்து விட வேண்டும்.

உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்தைப் போதுமான அளவு சேர்த்துக் கொண்டால் பல் நோய் தலை காட்டாது என்று டாக்டர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ப்ளோரைடுதான் அதிகம் எடுத்துக் கொள்வேன் என்று அடம்பிடித்தால் அதன் விளைவுகள் உடம்பு செல்களை பாதிக்கும். கழுத்து, முதுகெலும்பு, முட்டி, இடுப்பெலும்பு, கை கால்களில் உள்ள இணைப்பு எலும்புகளையும் பாதிக்கும். ப்ளோரைடு அதிகளவு உள்ள பேஸ்ட்டுக்களை உபயோகிப்பதால் தோல் புற்றுநோய் கூட வருவதாக அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தேநீர், கோழி சூப், எலும்பு உணவு, மீன், பதப்படுத்தப்பட்ட மீன் ஆகியவற்றிலும் ப்ளோரைடு கலந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவற்றை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்த்தால், ப்ளோரைடு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

See More
No automatic alt text available.

சுருட்டை முடியை பராமரிக்க வழிகள்..!

சுருட்டை முடி அனைவருக்கும் கிடைத்து விடாது.

ஒரு சிலருக்குதான் இயற்கையிலேயே கருமையான சுருட்டை, சுருட்டையாக கூந்தல் அமையும்.

...

இது கூந்தலின் அடர்த்தியையும், பெண்களின் அழகை அதிகரித்துக் காட்டும்.

அடர்த்தியாகவும், அதேசமயம் கரு கருவென அமைந்த சுருட்டை முடியை பராமரிக்க அழகியல் நிபுணர்கள் கூறியுள்ள சில ஆலோசனைகளை பின்பற்றலாம்.

அடிக்கடி தலை குளிக்காதீங்க

தினசரி தலைக்கு குளிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கலாம்.

அது தவறானது. இயற்கையிலே தலையில் உள்ள எண்ணெய் தன்மை இழப்பிற்கு அது காரணமாகிறது.

இதனால் தலைமுடி வறண்டு ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

குறிப்பாக சுருட்டை முடிக்கு அதிக எண்ணெய் தன்மை தேவை.

அதிலும் தினசரி தலைக்கு குளிப்பதன் மூலம் கூந்தல் சிக்கல் ஏற்படும் அதிகமாகும்.

எனவே தினசரி தலைக்கு தண்ணீர் ஊற்றவேண்டாம் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.

ஷாம்பு, கண்டிசனர்

சுருட்டை முடி உள்ளவர்கள் சரியான ஷாம்பு, கண்டிசனரை பயன்படுத்துவது அவசியம்.

இயல்பான நேரான கூந்தல் உள்ளவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, கண்டீசனரையே பயன்படுத்து சரியாக இருக்காது என்பது அழகியல் நிபுணர்களின் அறிவுரை.

கூந்தல் சிகிச்சை

சுருட்டை கூந்தல் உடைந்து உதிர்வதை தடுக்க வாரம் ஒருமுறை அதற்கு தனியான சிகிச்சை அளிப்பது அவசியம்.

ஒரு கிண்ணத்தில் வெண்ணெய் எடுத்துக்கொண்டு கூந்தலை நன்றாக விரித்து விட்டுக் கொள்ளவும்.

வெண்ணையை விரலில் எடுத்து கூந்தலின் வேர்கள் வரை படுமாறு தேய்த்து ஊறவைக்கவும்.

அரைமணிநேரம் ஊறியபின் குளிக்க கூந்தல் உடைந்து உதிர்வது குறையும்.

சீப்பில் கவனம்

சுருட்டை கூந்தல் உடையவர்கள் பெரிய பற்களை உடைய சீப்பில்தான் சீவவேண்டும்.

அப்பொழுதுதான் எளிதாக சிக்கல் எடுக்க முடியும். கூந்தலும் வலி இல்லாமல் சீவ முடியும்.

எனவே உங்களுக்கு என்று தனியாக சீப்பு வைத்துக் கொள்ளுங்கள்.

சுருட்டை கூந்தல் உள்ளவர்களுக்கு அதிகம் அழுக்கும், பேன் தொல்லையும் ஏற்படும் எனவே கவனமாக கையாளுங்கள்.

தலைமுடி கவனம்

தலைக்கு குளித்து விட்டு அதிகநேரம் தலையில் துண்டி கட்டியிருக்க வேண்டாம்.

ஏற்கனவே சுருட்டை முடி உள்ள நிலையில் அதிகநேரம் தலையில் துண்டு கட்டியிருப்பது ஈரப்பதம் உறிஞ்சப் படுவதோடு கூந்தல் அதிகம் வறண்டு உதிர வாய்ப்புள்ளது.

கூந்தலை நேசியுங்கள்

யாருக்குமே கிடைக்காத வரம் உங்களுக்கு கிடைத்துள்ளது.

சுருட்டை கூந்தல் உள்ளவர்கள் நமக்கு ஏன் இப்படி என்று வருந்த வேண்டாம்.

உங்கள் கூந்தல் அனைவரையும் கவரும். எனவே உங்கள் கூந்தலை நேசியுங்கள்.

See More
Image may contain: 1 person, smiling, closeup and outdoor

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி உண்டு. இந்த பழமொழியின் பொருளை நோயின் பாதிப்பினால் தினமும் மருந்து மாத்திரைகளுடன் அவதியுறுபவர்கள் நன்கு உணர்வார்கள்.

மனித உடலானது எண்ணற்ற தசை, தமனி, எலும்பு, நரம்புகளால் பின்னிப் பிணையப்பட்ட ஒரு உருவமாகும். உடலின் செயல்பாடுகள் அனைத்தும் வாத, பித்த, கபம் என்னும் முக்குற்றங்களால் செயல்படுகிறது. இதில் ஏதேனும் ஒன்றின் ஆதிக்கம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ அது நோயாக மாறிவிடுகிறது. இதற்கு ஆதாரமாக செயல்படுபவை தச வாயுக்கள்தான். இவற்றின் செயல்பாடு...

Continue Reading
Image may contain: one or more people

ஊறுகாய் இதயத்துக்கு டேஞ்சர்!

ஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?...

Continue Reading
Image may contain: food

வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம் வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.

Image may contain: plant, nature and outdoor