Photos
Posts
சித்தர் கலைகள் சரகலை, பஞ்சபட்சி, ரசமணி, ரசவாதம், மாந்திரீகம், முப்பு, வர்மக்கலை, காயகற்பம், வாசியோகம், வசியம், விளக்கம்.
siddharprapanjam.blogspot.com
Image may contain: one or more people
Kumar Esan

பெண்களின் வயிற்று சதை குறைய.....!


அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்று பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழக...ு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளார். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை. இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம்.

முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம்.

உலர்ந்த மகிழம் பூ பொடி - 200 கிராம்

கிச்சிலி கிழங்கு பொடி - 100 கிராம்

கஸ்தூரி மஞ்சள் பொடி - 100 கிராம்

கோரை கிழங்கு பொடி - 100 கிராம்

உலர்ந்த சந்தனத் தூள் - 150 கிராம்

இவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் ஊரிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும்.

இந்த மருத்துவ முறையை வராமித்ரர் அங்கரசளைகள் என்ற நூலில் கூறியுள்ளார்.

குளியல் பொடி

இன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.

அருகில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

சோம்பு - 100 கிராம்

கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்

வெட்டி வேர் - 200 கிராம்

அகில் கட்டை - 200 கிராம்


சந்தனத் தூள் - 300 கிராம்

கார்போக அரிசி - 200 கிராம்

தும்மராஷ்டம் - 200 கிராம்

விலாமிச்சை - 200 கிராம்

கோரைக்கிழங்கு - 200 கிராம்

கோஷ்டம் - 200 கிராம்

ஏலரிசி - 200 கிராம்

பாசிப்பயறு - 500 கிராம்

இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும்.

இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும்.

இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.

பெண்களின் வயிற்று சதை குறைய

நம் இந்திய பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும்.

இவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.

See More
Posts
Image may contain: text
Tamil Siddha Thamil Siththar தமிழ் தந்த சித்தர்கள் is with த.கணபதி நெய்வேலி and 4 others.

குழந்தை பிறக்கும் நாள் கணிக்கும் முறை - Natural Child Birth Date

பொதுவாக பெண்களுக்கு கர்ப்பம் தரித்தவுடன் குழந்தை எப்போது பிறக்கும் என்பதை அறிந்து கொள்ள அனைவரு...க்கும் ஆர்வம் இருக்கும். இதற்காக மருத்துவர்களை நாடும் போது அவர்கள் பொதுவாக கர்ப்ப கால கணக்கில் குறிப்பிட்டுள்ள முறைப்படி குழந்தை பிறக்கும் நாளை கணித்துக் கூறுவார்கள்.
இன்றைய காலத்தில் இந்த கர்ப்பகால கணக்கும் அதில் உள்ள சூட்சுமம் அனைவரும் அறியாததால் இயற்கையான பிரசவம் என்ற நிலை மாறி சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சையில் குழந்தை பிறக்கும் நிலையும் அதன் சதவிகிதமும் அதிகரித்து வருகின்றது.

கருத்தரிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கருப்பையில் குழந்தையின் வளர்ச்சி முதிர்வடைந்தவுடன் இயற்கையாக பிறக்க வேண்டும் என்பதுதான் மனித உடலின் அமைப்பாகும். ஆனால் இன்றைய அறிவியல் உலகின் மருத்துவ முறையின் மருத்துவர்கள் சிலரால் அறுவை சிகிச்சை என்னும் நிலைக்கு ஆளாகின்றனர்.

கர்ப்பகால கணக்கில் கூறப்படும் 40 -வாரம் [ 280 -நாட்கள் ] என்பது பொதுவானதாகும்.இதில் ஆண் குழந்தையாக இருந்தால் முன்பே பிறந்து விடும்.பெண் குழந்தையாக இருந்தால் இந்த கணக்கில் கூறப்படும் நாட்களுக்குப் பின்புதான் பிறக்கும்.ஆனால் மருத்துவர்கள் நாட்களை முன், பின்னாக கணித்து சிசேரியன் என்னும் அறுவை சிகிச்சை வரை கொண்டு செல்கின்றனர். எனவே மேலே இதனை கணிக்கும் முறையை தனியே பதிவு செய்துள்ள விபரங்களை கவனமாக படித்து கர்ப்பகால கணக்கை கணித்து அந்த நாள் வரை காத்திருங்கள்.
நாட்கள் தாமதம் ஆனாலும் பயம்,கவலை அடைய வேண்டாம்.
இயற்கையான பிரசவ வலி வந்து சுகப்பிரசவம் [Normal Delivery ] ஆகும்.

நன்றி !
இமயகிரி சித்தர்

See More
இரத்த மூலம், பெரும்பாடு , சீத பேதி குணமாக்கும் மாம்பருப்பு மருத்துவம் - Bleeding Piles, Dysentery
siddhar-medicine.blogspot.com
சித்தர் கலைகள் சரகலை, பஞ்சபட்சி, ரசமணி, ரசவாதம், மாந்திரீகம், முப்பு, வர்மக்கலை, காயகற்பம், வாசியோகம், வசியம், விளக்கம்.
siddharprapanjam.blogspot.com
குழந்தை பிறக்கும் நாள் கணிக்கும் முறை - Natural Child Birth Date
siddhar-medicine.blogspot.com
Image may contain: plant, nature and outdoor
முல்லை மு.மன்சூர் அலி. is with Siva Santhosh and 12 others.

"மரு" (Skin Tag) உதிர...


இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது "மரு" [Skin Tag] ஆகும்.

...

இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை...


அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும்.

மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும்.

இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.

நன்றி:- இமயகிரி சித்தர்...

சித்தர் வேதா குருகுலம் - திருச்சி.

See More
தாய்ப்பால் சுரக்கச்செய்யும் அற்புத மூலிகை - அம்மான் பச்சரிசி - மரு உதிர - Skin Tags
siddhar-medicine.blogspot.com
Image may contain: 1 person
Ulaga Tamil Maruthuva Kazhagam

தண்ணீர் தரும் அரிய மூலிகை
மலைபயணங்களில் தாகம் தணிக்கும் சதையன் கொடி


களக்காடு முண்டந்துறை சரணாலயத்தின் பாம்பனாறு வனப்பகுதியில் மூலிகைகள் தேடி மேற்கொள்ளப்பட்ட ஒ...ர் களப்பணியில் மிக்க தாகம் ஏற்பட்ட பொழுது எங்களுடன் உதவிக்கு வந்த பழஙகுடியான திரு பூதத்தான் ஒரு கொடியை வெட்டினார். அதிலிருநது சுமார் ஒரு குடம் அளவு தண்ணீர் கொட்டியது. குழுவினர் அத்தண்ணீரை பருகி தாகம் தணித்து கொண்டனர். எங்களுக்கு மிக்க ஆச்சரியம்.. அவரிடம் விசாரித்த போது பாரம்பரியமாக அவர்கள் மலைப்பயணங்களுக்கு செல்லும் போது தண்ணீரில்லாத பகுதிகளில் இக்கொடியே அவர்களின் தாகம் தணித்தது என்று கூறினார் . அக்கொடியின் பெயர் சதையன் ஆகும்.

See More
Image may contain: food
Muralidass

நலுங்குமா-மூலிகைக் குளியல்பொடி

இன்று பல்வேறு வகையான சோப்புகள் சந்தையில் கிடைக்கின்றன.இவற்றில் சில, அதிகப்படியான எண்ணெய்ப்பசையை நீக்குவதாகவும் இன்னும் சில, வறட்ச...ியை நீக்குவதாகவும் விளம்பரப்படுத்தப்படுகிறது.ஆனால் இவை எந்த அளவிற்கு உடலுக்கு நன்மை செய்யும் என்பதை அறுதியிட்டுக் கூறமுடியாது.சமீபத்தில் ஒரு நிறுவனத்தின் சோப்பினால் புற்றுநோய் வருவதாகக் கூட செய்தி அறியமுடிந்தது.ஆனால் இயற்கையாக தோலுக்கு நன்மையை மட்டுமே செய்யக்கூடிய குளியல் பொடியாக நமது பாரம்பரிய ‘நலுங்குமா’ இருப்பது சித்தர்கள் நமக்கு அருளிய கொடையென்றே சொல்லலாம்!

நலுங்குமாவில் சேரும் சரக்குகள்

கிச்சிலிக்கிழங்கு

வெட்டிவேர்

சந்தனம்

கோரைக்கிழங்கு

கார்போகரிசி

விலாமிச்சம்வேர்

பாசிப்பயறு

அனைத்துச் சரக்குகளையும் சம அளவு எடுத்து அரைத்துச் சலித்து காற்றுப் புகாமல் வைத்துக் கொள்ளவும்.

இந்தக் குளியல் பொடியினைப் பயன்படுத்தி தோல்நோய்கள் வராமல் நமது சந்ததியினரைக் காப்போம்!

Source from Ulaga Tamil Maruthuva Kazhagam page

for more health news pls like the page https://www.facebook.com/Siddhacom

See More
Manickavasagam Rengaraju

சித்த மருத்துவத்தில் கோமாரி நோய்க்கு மருத்துவம்:
சிக்குன்குனியா…டெங்கு… அடுத்து மீண்டும் ஒரு கொள்ளை நோய்…இம்முறை மனிதருக்கு அல்ல—விவசாயிகளின் நண்பணான மாடுகளுக்க...ு ”கோமாரி” என்னும் வைரசு நோய் தாக்கி பல மாடுகள் இறந்து வருவதை செய்திகளில் பார்க்க நேரிடுகிறது.கால்நடை துறையினர் கோமாரியை கட்டுபடுத்த முடியாமல் திணறி வருகின்றனர். சில கிராமங்களில் இறந்த மாடுகளை கால்வாய்,குளம்,ஏரி வீசி வருவதால் மனிதருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,சென்னையில் உள்ள நண்பன் என்னை அவசரமாக அழைத்தான். நானும் ஏதோ வழக்கமான ஒன்றாக இருக்கும் என் நினைத்து பேசினேன்.மறுமுனையில் அவன் கொஞ்சம் சீரியசாக,கால் நடைகளுக்கு பரவும் கோமாரி நோய்க்கு சித்த மருத்துவம் இருக்க என்று கேட்டான்.அப்பொழுதுதான் அவன் தங்கை,கால்நடை மருத்துவர் என்பது நினைவிற்கு வந்த்து.
பாளையங்கோட்டை கல்லூரியில் இள நிலை சித்த மருத்துவம் படித்து கொண்டிருந்தபோது, நண்பர்களுடன் சென்று வைத்தியர்களை கண்டு,மருந்து செய் முறைகளை கற்ற ஞாபகம் வந்த்து.அவர்களில் ஒருவர் சித்த வைத்தியம் மூலம் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் சிகிச்சை அளிப்பவர்.அவருடைய மருந்து முறைகளை குறிப்பெடுத்த ஞாபகம் வந்து,அதில் தெடி பார்க்கும்ப்போது,கீழ்கண்ட மருத்துவ குறிப்பு கோமாரி நோய்க்கு என எழுதி இருந்தேன்.”கடுக்காய், நிலவேம்பு,கருஞ்சீரகம் பொடித்து பாலில்” கொடுக்க வலியுருத்தபடுகிறது.அந்த வைத்தியருக்கு நன்றியை நினைவு கூர்ந்து கொண்டேண்.
கோமாரி நோய் குறித்து சித்த மருத்துவ நூல்கள் ஏதேனும் இருக்கிறதா? என தேடியபோது,”அகத்திய முனிவர் பசு மாட்டு வாகடம்” என்னும் நூலில்குறிகுணங்களுடன் கூறப்பட்டிருப்பது அசந்து போக வைத்த்து.பசும்பால் 12 அவுன்ஸ் – மலை வாழைப்பழம் – 3 பசு வெண்ணெய் – 4 அவுன்ஸ் இளநீர் – 2 அவுன்ஸ் கடுக்காய் பிஞ்சு 5 பலம்,வீழி இலை 5 பலம் இவற்றை கலந்து 5 வேளை கொடுக்க சொல்லி இருக்கிறார்.
குறிப்பு:கோமாரி நோய் பாதிப்பில் இறந்து போகும் கால்நடைகளால் சுகாதார கேடு மட்டுமின்றி விவசாயிகளின் பொருளாதாரமும் இழக்கும் சமூக பொறுப்பினை உணர்ந்து இத்தகவலை செயல்படுத்துவதிலும் அரசு எந்திரத்திடம் எடுத்து செல்வது தலையாய கடமை.

See More
Image may contain: food
Ulaga Tamil Maruthuva Kazhagam

நலுங்குமா-மூலிகைக் குளியல்பொடி

இன்று பல்வேறு வகையான சோப்புகள் சந்தையில் கிடைக்கின்றன.இவற்றில் சில, அதிகப்படியான எண்ணெய்ப்பசையை நீக்குவதாகவும் இன்னும் சில, வறட்ச...ியை நீக்குவதாகவும் விளம்பரப்படுத்தப்படுகிறது.ஆனால் இவை எந்த அளவிற்கு உடலுக்கு நன்மை செய்யும் என்பதை அறுதியிட்டுக் கூறமுடியாது.சமீபத்தில் ஒரு நிறுவனத்தின் சோப்பினால் புற்றுநோய் வருவதாகக் கூட செய்தி அறியமுடிந்தது.ஆனால் இயற்கையாக தோலுக்கு நன்மையை மட்டுமே செய்யக்கூடிய குளியல் பொடியாக நமது பாரம்பரிய ‘நலுங்குமா’ இருப்பது சித்தர்கள் நமக்கு அருளிய கொடையென்றே சொல்லலாம்!

நலுங்குமாவில் சேரும் சரக்குகள்

கிச்சிலிக்கிழங்கு

வெட்டிவேர்

சந்தனம்

கோரைக்கிழங்கு

கார்போகரிசி

விலாமிச்சம்வேர்

பாசிப்பயறு

அனைத்துச் சரக்குகளையும் சம அளவு எடுத்து அரைத்துச் சலித்து காற்றுப் புகாமல் வைத்துக் கொள்ளவும்.

இந்தக் குளியல் பொடியினைப் பயன்படுத்தி தோல்நோய்கள் வராமல் நமது சந்ததியினரைக் காப்போம்!

See More
Image may contain: 2 people, outdoor
Senthamizhan Maniarasan is with Drsenthilvel Thaainadu and 14 others.

அலோபதி: சொந்தமாகப் பெயர் கூட இல்லாத மருத்துவமுறை!
ம.செந்தமிழன்

சித்த மருத்துவம், மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம், ஓகமுறை மருத்துவம் (யோகா சிகிச...்சை) அக்குபஞ்சர், தொடு சிகிச்சை (அக்குபிரஷர்), யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட பல மருத்துவமுறைகள் இந்தியாவில் நடைமுறையில் உள்ளன. இவை அனைத்திற்கும் தனித்தனியாக பெயர்கள் உள்ளன அல்லவா. அலோபதி என நாம் இன்று அழைக்கும் முறைக்கென சொந்தமான பெயர் எதுவும் இல்லை என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
அலோபதி (Allopathy) எனும் சொல் – ’மாறுபட்ட / வேறான’ என்ற பொருள் கொண்டது. ஓமியோபதியின் தந்தை டாக்டர்.ஹானிமன், தாம் உருவாக்கிய மருத்துவமுறைக்கு ‘ஓமியோபதி’ (Homeopathy) எனப் பெயரிட்டார். அவர் காலத்தில் வளர்ச்சியடைந்த நிலையில் இருந்த மருத்துவ முறைக்கென ஒரு பெயரிட்டார், அதுவே ‘அலோபதி’ எனும் சொல். ஓமியோபதி என்றால், நோய்க்குறியீடுகளுக்கு ஒத்த தன்மையிலான சிகிச்சை அளிக்கும் மருத்துவம் என்று பொருள். அலோபதி என்றால், நோய்க் குறியீடுகளுக்கு மாறுபாடான, வேறுபட்ட தன்மையில் சிகிச்சை அளிக்கும் மருத்துவமுறை என்று பெயர். ஒருவகையில், கேலியாக டாக்டர். ஹானிமன் சூட்டிய பெயர்தான் அலோபதி என்பது.
தனக்கென சொந்தமாக பொருத்தமான பெயர்கூட இல்லாதமுறைதான் இன்றைய ‘அலோபதி’ ஆகும். ஆகவே இதனை வசதியாக, நவீன மருத்துவ முறை (modern medicine system) என்று அழைப்பதுண்டு. இதுவும் பெயர் அல்ல, ஒரு பொது அடையாளம். அவ்வளவே.
ஆனால், இந்த மருத்துவத்துறை, நோய்களுக்குப் பெயர் சூட்டுவதில் வல்லமை பெற்றது. காய்ச்சல் என்றால் அதற்குப் பலவிதமான பெயர்க்ளைச் சூட்டுவார்கள். மஞ்சள் காமாலை என்றால் அதில் பலவகைகளை அடுக்குவார்கள். சர்க்கரை நோய் என்றால், அதில் பல வித நிலைகளைக் குறிப்பிட்டு அவற்றிற்கெல்லாம் பெயர் வைத்து அழகுபார்ப்பார்கள். உண்மையில், மஞ்சள் காமாலை, சர்க்கரை உள்ளிட்ட எண்ணற்ற நோய்களுக்கு அலோபதியில் ‘குணப்படுத்தும்’ மருந்தே இல்லை. இதைத்தான் மரபு மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள். இந்திய மருந்து மற்றும் அழகுப் பொருட்கள் சட்டமும் இதையே பட்டியலிட்டுக் காட்டுகிறது.
’’நோயைத் தீர்த்து மனிதர்களை நலமடையச் செய்ய இயலாத நிலையில், நோய்களுக்கு விதவிதமான பெயர்களை மட்டும் சூட்டுவதில் என்ன பயன்?’’ என்பதே மக்களாகிய நாம் முன் வைக்க வேண்டிய கேள்வி.
மஞ்சள் காமாலையைச் சான்றுக்கு எடுத்துக்கொள்வோம். அலோபதி இதை Hepatitis என்ற பொதுப் பெயரால் அழைக்கிறது. இதோடு நில்லாமல், ஐந்து வகைகளையும் பட்டியலிடுகிறது. அவை – HAV, HBV, HCV, HDV, HEV ஆகும். அதாவது – ஹெபடைடிஸ் A வைரஸ் (Hpetaitis A virus), B virus, C virus, D virus, E virus ஆகியன. சமீபத்தில், G virus என்பதையும் கண்டறிந்துள்ளனராம். ஆக, மஞ்சள்காமாலையில் 6 வகைகள் இருப்பதாக அலோபதி கூறுகிறது. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மைகளும், சில பொதுத்தன்மைகளும் குறிப்பிடப்படுகின்றன.
எல்லாம் சரி. மஞ்சள் காமாலைக்கு அலோபதியில் ‘குணமாக்கும்’ மருந்து உண்டா என்றால், இல்லை! என்ன ஒரு வினோதமான மருத்துவமுறை இது!
இந்திய மருந்து மற்றும் அழகுப் பொருள் சட்டத்தின் அட்டவணை J பட்டியலிட்டலில், மஞ்சள் காமாலை 33 வது இடத்தில் உள்ளது. அதாவது, இந்த நோய்க்கும் ’குணப்படுத்தும் மருந்து இருப்பதாக அலோபதி மருத்துவத்துறை எந்தவிதக் கருத்தையும் உருவாக்குவது தடை செய்யப்பட்டுள்ளது’. இதுதான் சட்டம். இதுதான் நடைமுறையும் கூட.
நாம் மஞ்சள் காமாலைக்கு என்ன சிகிச்சை எடுத்துக் கொள்கிறோம் எனச் சிந்தியுங்கள். ஏராளமான நாட்டு மருந்துகள் வழியாகத்தான் அந்த நோயை நாம் விரட்டி நலம் அடைகிறோம். அலோபதி மருத்துவர்களில் பலர், கீழாநெல்லி கலந்த ஆயுர்வேத, சித்த மருந்துகளைப் பரிந்துரை செய்வதையும் அனுபவத்தில் காண்கிறோம் அல்லவா. அவர்கள் அவ்வாறு பரிந்துரைப்பது நல்ல நோக்கில்தான் என்பதால், அது வரவேற்கத்தக்கதே. ஏனெனில், ஒரு மருத்துவ முறையில் மருந்து இல்லை என்றால், நோயாளியை பரிசோதனை எலியாக்கி, விளையாடுவதைவிட, பிற முறைகளில் உள்ள மருந்துகளைப் பரிந்துரைப்பதே மனிதநேயம் மிக்க செயல்.
டெங்கு காய்ச்சல் மற்றுமொரு சான்று. டெங்கு எனப் பெயரிட்டார்களே தவிர, அந்த நோயை முற்றிலும் குணமாக்கும் அலோபதி முறையிலான மருந்து கண்டறியப்படவில்லை. மக்கள் செத்து விழுந்துகொண்டிருக்கையில், பெரும் பீதியில் சமூகம் பதட்டமடைந்து கொண்டிருந்த நிலையில் கூட அலோபதி மருத்துவத் துறை, அதற்கான ‘குணப்படுத்தும்’ மருந்தைக் கண்டறியவில்லை.
தமிழக அரசு டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவத்தைப் பரிந்துரைத்தது. இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில்:
’’டெங்கு காய்ச்சல் கொசுக்களின் மூலமாக பரவுகிறது. இந்த காய்ச்சல் வந்தால், கடுமையான உடல் வலியும், உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் அளவு குறைந்தும் காணப்படும்.
டெங்கு காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சைகள் எதுவும் இல்லை. காய்ச்சலை குறைப்பது, ரத்ததட்டு அணுக்கள் குறைவதை தடுப்பது போன்றவைகளுக்கு பொதுவான சிகிச்சை வழங்கப்படுகிறது. டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரத்த தட்டு அணுக்கள் அழிப்பதால், ரத்த கசிவு ஏற்பட்டு இறப்பு ஏற்படுகிறது.
சித்த மருத்துவத்தின், பப்பாளி இலை சாறு குடித்தால், ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கும், நிலவேம்பு குடிநீர் டெங்கு வைரசை அழித்து, காய்ச்சலை குணப்படுத்தும். மலைவேம்பு இலை சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது. எனவே, இவைகள் மூலம் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கவும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சித்தமருந்துகளை விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது’
என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நடவடிக்கைதான் டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களைக் காத்தது. சித்த மருத்துவம்தான் டெங்குவை விரட்டியது.
அம்மை எனப்படும் உடல் தொந்திரவுக்கும் இதே நிலைதான். நம் மரபு மருத்துவத்தில், அம்மை வந்தால், உணவுக் கட்டுப்பாடு, சுகாதாரமான சூழல் ஆகியவற்றுடன், சில பத்திய மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. வேப்பிலைகளைப் பரப்பி அதன் மீது அம்மை தாக்கியவரைப் படுக்க வைத்து, அம்மைப் புண்கள் ஆறும்போது, வேப்பிலை நீரில் மூன்று முறை குளிக்கச் செய்வதே சிகிச்சை முறை. இதை நாம் அனைவரும் அறிவோம்.
இந்த முறையில்தான் பல்லாயிரம் ஆண்டுகளாக, நம் சமூகம் வாழ்ந்து வந்தது, உடல் நலத்துடன்.
அலோபதியில் இதற்கும் ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். Chicken pox என்பதுதான் அது. இது ஒரு விநோதமான பெயர். இந்தப் பெயருக்கான காரணம் குறித்து ஏராளமான ஊகங்கள் மட்டுமே உள்ளன. துல்லியமான ஒரே காரணம் இதுவரை கூறப்படவில்லை. சரி, இது மிக நல்ல பெயராகவே இருக்கட்டும். இதற்கு என்ன ‘குணப்படுத்தும்’ மருந்து உள்ளது அலோபதியில்? இல்லை என்பதுதான் விடை.
பிரிட்டன் அரசின் மருத்துவ இணையதளம் அம்மை பற்றிப் பின்வருமாறு உரைக்கிறது:
’ There is no cure for chickenpox, and the virus usually clears up by itself without any treatment.’
(http://www.nhs.uk/Conditions/Chickenpox/Pages/Treatment.aspx)
அதாவது, ’அம்மையை குணமாக்க இயலாது. இதை உருவாக்கும் வைரஸ் கிருமி எந்த சிகிச்சையும் இல்லாமலேயே தம்மைத்தாமே அழித்துக் கொள்கிறது’ என்கிறது, அலோபதியின் தலைநகரம் போல் விளங்கும் பிரிட்டனின் அரசு. பிற அலோபதி வல்லுனர்களும் இதைத்தான் கூறுகிறார்கள்.
நம் மரபு மருத்துவம் இந்த உண்மையைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்ததால்தான், அம்மை தாக்கியவருக்கு மருந்து தராமல், சிகிச்சை அளிக்கும் முறையை உருவாக்கியது. கூடுதலாக, வேப்பிலையும் பத்திய உணவும் சேர்ந்து, விரைவில் நலமடைய உதவுகின்றன.
சர்க்கரை நோயும் இவற்றைப்போல, குணமாக்கக் கூடிய நோய்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அலோபதி மருத்துவத்துறையினால் அதை குணப்படுத்த முடியாது. அவ்வளவுதான்.
சர்க்கரையிலும் பல நிலைகளைப் பிரித்து அவற்றுக்கெல்லாம் பெயர் இட்டு அழகு பார்க்கிறது, அலோபதி மருத்துவம். வழக்கமான கேள்வியைத்தான் நாம் இதற்கும் கேட்க வேண்டும்,
‘பெயர் வைப்பது, வகைப் பிரிப்பது எல்லாம் சரிதான். நோயை குணப்படுத்த உங்களிடம் மருந்து இருக்கிறதா?’

சித்த மருத்துவம், தொடு சிகிச்சை, ஓமியோபதி, ஆயுர்வேதம், ஓக சிகிச்சை உள்ளிட்ட பல முறைகள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டவை. ஏதோ, அலோபதி மட்டும்தான் இந்த நாட்டின் ஒரே சிறந்த, அங்கீகாரம் பெற்ற, சட்டப் பாதுகாப்பு பெற்ற மருத்துவமுறை எனும் மாயை இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. முதலில் அதை உடைக்க வேண்டும்.
சித்த மருத்துவம் உள்ளிட்ட பல மரபு மருத்துவங்களில் ’சர்க்கரை நோயை குணப்படுத்த மருந்துகள் உள்ளன’ என்பது சட்டப்படியான, நடைமுறைப்படியிலான, மரபுவழிப்பட்ட உண்மை ஆகும். இந்த உண்மையை நாம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது.
இனிப்பு ஆவணப்படத்தில், இந்த உண்மைகளைத்தான் பதிவு செய்கிறேன்.

See More
Image may contain: food and text
தக்கலை கவுஸ் முஹம்மத் is with Musthafa Kamal and 42 others.

பீட்ரூட் - மனிதர்களின் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது
மற்றும் பல்வேறு சுவாரஸ்ய நல்ல தகவல்கள்
**************************************************
லண்டன் மருத்...துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் தெரியவந்தன. தினசரி 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஒருவரின் உயர் ரத்த அழுத்தம் சுமார் 10 எம் எம் அளவால் குறைந்து போனது ஆய்வில் தெரிய வந்தது.

பதினைந்து பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் உயர்ரத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பலருக்கும் ரத்தஅழுத்தம் சராசரி அளவுக்கு குறைந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்தன. இவர்கள் பீட்ரூட் சாற்றை குடித்து மூன்று முதல் ஆறுமணி நேரம் கழித்து இவர்களின் உயர் ரத்த அழுத்தம் கணிசமாக குறைந்ததாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர். மேலும் மறுநாளும் கூட இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைந்தே காணப்பட்டதாகவும் இவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஆய்வு முடிவு பற்றி மருத்துவ நூலான ஹைபர்டென்ஷன் தெரிவித்துள்ளது.

ரத்த நாளங்கள் விரிவடையும்

பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்கிறது. இரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வலிகளை குறைக்கிறது.

அஞ்ஞைனா என்கிற இரத்தநாள வலிநோயால் அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட் மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்கிறது. அதேபோல் நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள்.

நைட்ரேட் சத்தை சேமிக்கிறது.

மண்ணில் இயற்கையிலேயே இருக்கும் நைட்ரேட் சத்தை தாவரங்கள் ஒவ்வொருவிதமாக உறிஞ்சும் தன்மையையும், சேமிக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன. இதில் பீட்ரூட் தாவரம் நிலத்தில் இருந்து உறிஞ்சும் நைட்ரேட் சத்தை தனது கிழங்கில் அடர்த்தியாக சேமிக்கும் தன்மை கொண்டது. எனவே இந்த பீட்ரூட் கிழங்கின் சாற்றை குடிக்கும் போது, அதில் இருக்கும் நைட்ரேட் மனிதர்களின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் வேலையை செய்கிறது.

பக்கவிளைவுகள் அற்ற பீட்ரூட்

இவ்வளவு குறைவான நைட்ரேட், உயர் இரத்த அழுத்தத்தில் இவ்வளவு பெரிய நல்ல பலனை அளிக்கும் என்பது தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் அம்ரிதா அலுவாலியா. எனவே நைட்ரேட் சத்து அதிகம் இருக்கும் பீட்ரூட் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், ஒருவரின் உயர் ரத்த அழுத்தத்தை கணிசமாக குறைக்க முடியும் என்பது நோயாளிகளுக்கும் எளிதில் கடைபிடிக்கக்கூடிய, பக்கவிளைவுகளற்ற சிகிச்சைமுறையாக மாறும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார் அவர்.

அதேசமயம், நைட்ரேட் அதிகம் உள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் நாள்பட்ட உயர் ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா என்பது குறித்து முடிவு செய்வதற்கு மேலதிக ஆய்வுகள் செய்யவேண்டியது அவசியம் என்றும் அம்ரிதா அலுவாலியா தெரிவித்தார். அந்த ஆய்வின் முடிவுகளுக்காக காத்திருக்காமல், பச்சைக் காய்கறிகளை அதிகம் உண்பது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நன்மைதான் என்கிறார் அவர்.
அதேசமயம், பீட்ரூட் சாற்றை குடிப்பவர்களின் சிறுநீர் இளஞ்சிகப்பு நிறமாக மாறும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
எனவே சிறுநீரின் நிறத்தை பற்றி கவலைப்படாதவர்கள், பீட்ரூட் சாற்றை குடித்து தங்களின் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க முயலலாம் என்பது இந்த ஆய்வாளர்களின் யோசனை.

தினமும் இரண்டு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடித்தால், ரத்த அழுத்தம் குறையும் எனவும், இதனால் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்ற நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் எனவும் ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால், உடலுக்கு ஏற்படும் நன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதுபற்றி, லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழக பேராசிரியர் அம்ரிதா அலுவாலியா கூறியதாவது : ஒருவர், தினமும் இரண்டு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது. இதை குடிப்போருக்கு, ரத்த அழுத்தம் கணிசமான அளவு குறையும். பீட்ரூட் ஜூஸ் குடிக்கும் போது, பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட், சுத்திகரிப்பில் ஈடுபடுகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம் சிறிது குறைகிறது. பழங்களும், பச்சைக் காய்கறிகளும் வயிற்றில் சென்று அடையும் மாற்றம் குறித்த ஆய்வில், இந்த உண்மை தெரிந்தது. எனவே பீட்ரூட் ஜூஸ் குடித்தால் இதய நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம் என அம்ரிதா அலுவாலியா கூறினார்.

இனிப்புச் சுவையுடைய அடர்ந்த சிவப்பு நிறம் கொண்ட பீட்ரூட்டை அப்படியே சாப்பிடலாம். ஏனெனில் அந்த அளவில் இதன் சுவையானது கேரட்டைப் போன்றே சூப்பராக இருக்கும். அத்தகைய பீட்ரூட் நிறைய நன்மைகளை உள்ளக்கியுள்ளது. அதில் அனைவருக்கும் தெரிந்தது, பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பது தான். ஆனால் பலருக்கு இதன் முழு நன்மைகளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய சத்து நிறைய பீட்ரூட்டை ஜூஸாகவோ, வேக வைத்தோ அல்லது சாலட் போன்றோ சாப்பிடலாம். இப்போது பீட்ரூட்டை சாப்பிட்டால், என்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்று பார்ப்போமா!!!


அல்சர்

அல்சர் உள்ளவர்கள், தினமும் பீட்ரூட்டை ஜூஸ் போட்டு, தேனுடன் சேர்த்து சாப்பிட்டால், அல்சர் விரைவில் குணமாகிவிடும்.

சிறுநீரக சுத்திகரிப்பு

பீட்ரூட் சாற்றை, வெள்ளரிக்காய் சாற்றுடன் கலந்து சாப்பிட்டால், சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறி, சுத்தமாக இருக்கும்.

மூலநோய்

மூல நோய் இருப்பவர்கள், பீட்ரூட்டை கசாயம் போட்டு குடித்தால், குணமாகிவிடும்.
கல்லீரல் கோளாறு
கல்லீரல் கோளாறுகளுக்கும்பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.

இரத்த சோகை

பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.

புற்றுநோய்

தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழித்துவிடும். இதனால் புற்றுநோயை தடுக்கலாம்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

கொலஸ்ட்ரால்
நாள்தோறும் பீட்ரூட் ஜூஸை பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

செரிமான பிரச்சனை

செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள், பீட்ரூட் ஜூஸை குடித்தால், செரிமானப் பிரச்சனை நீங்கும்.

சிவப்பணுக்கள் அதிகரிக்கும்

பீட்ரூட்டை, எலுமிச்சை சாற்றில் நனைத்து பச்சையாக சாப்பிட்டால், இரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.

மறதி

பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்தால், மூளையில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, முதுமை மறதி (Dementia) மற்றும் ஞாபக மறதியை (Alzheimer) தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சரும அரிப்பு

சருமத்தில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்பட்டால், அப்போது அதனை சரிசெய்ய பீட்ரூட் சாற்றுடன், படிகாரத்தை பொடியாக்கி, அரிப்புள்ள இடத்தில் தடவினால், உடனே அரிப்பு அடங்கிவிடும்.

தீப்புண்

கையை தீயில் சுட்டுக் கொண்டால், அப்போது பீட்ரூட் சாற்றினை தீப்புண் உள்ள இடத்தில் தடவினால், தீப்புண் கொப்புளமாகாமல் சீக்கிரம் குணமாகும்.

பொடுகு

பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவர்கள், வினிகரை பீட்ரூட் வேக வைத்த நீரில் கலந்து, தலைக்கு தடவி ஊற வைத்து குளித்தால், பொடுகைப் போக்கிவிடலாம்.

பீட்ருட்டின் வரலாறு:

தெற்கு ஐரோப்பாவில் தன்னிச்சையாக வளர்ந்து கிடந்தது. முதலில் இதன் இலைகளை மட்டும் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பூமிக்கு அடியில் புதைந்திருக்கும் பீட்ரூட் கிழங்கை எடுத்துத் தலைவலிக்கும் பல்வலிக்கும் மருந்தாகப் பயன்படுத்தினார்கள். நியூசிலாந்தில் வேரை மட்டும் சாப்பிட்டார்கள். முதலில் பீட்ரூட் உருளை வடிவத்திலும் சற்று நீண்ட ஓவல் வடிவத்திலும் ஆழ்ந்த சிவப்பு நிறத்திலும் தங்க வண்ணத்திலும் இருந்தது. பதினாறாம் நூற்றாண்டில் மக்கள் இதைச் சாப்பிட ஆரம்பித்தனர். 200 ஆண்டுகள் கழித்துத்தான் இது பிரபலமாகியது. பீட்ரூட்டின் விசேஷம் அதன் இனிப்பு. எல்லா காய்கறிகளையும்விட அதிக சர்க்கரை இதில் உள்ளது.

1750-ல் ஐரோப்பாவில் ஏற்பட்ட சண்டையின் போது இங்கிலாந்து ஐரோப்பிய துணை கண்டங்களுக்கு கரும்பு அனுப்ப மறுத்து விட்டது. இதனால் அந்த நாடுகளில் சர்க்கரை தட்டுப்பாடு வந்தது. நெப்போலியனும் பிரெஷ்யா நாட்டு மன்னனும் சேர்ந்து அதிகப்படியான பீட்ரூட்டை உற்பத்தி செய்து அதிலிருந்து சர்க்கரை எடுக்கும் முயற்சியைச் செயல்படுத்தினார்கள். உலகளவில் எவ்வளவு கரும்பு உற்பத்தி செய்கிறார்களோ, அதே அளவு ஐரோப்பாவிலும் 1900-ல் உற்பத்தி செய்யப்பட்டு சர்க்கரை தயாரிக்கப்பட்டது.

வாங்குவது எப்படி?

நல்ல கருஞ்சிவப்பு வண்ணத்தில் தோல் மிருதுவாக, உருண்டையாக, அதன்மேல் வெடிப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும். பீட்ரூட் வாங்கும் போது இலைகளோடு வாங்குங்கள். இதில் நிறைய சத்துகள் உள்ளன. கீரையாக சமைத்து சாப்பிடலாம். 2 இன்ச் விட்டம் அளவுள்ள காயை வாங்குங்கள். பெரியதாக இருந்தால் முற்றல் அதிகம் இருக்கும். இலைகளை சாப்பிட வேண்டுமானால் இளசாக கரும்பச்சை வண்ணத்தில் இருக்கவேண்டும். பீட்ரூட் விளையும்போது ஒரு கிழங்குக்கும் அடுத்த கிழங்குக்கும் இடையே உள்ள இடைவெளியை அதிகப்படுத்துவதற்காக இடையில் இருக்கும் ஒரு பிஞ்சு பீட்ரூட்டைப் பிடுங்கிவிடுவார்கள். இந்த பீட்ரூட் சாப்பிட பயங்கர ருசியாக இருக்கும்.

பாதுகாப்பது:

ஃப்ரெஷ்ஷாக இருக்கக் கொஞ்சமாக அவ்வவ்போது வாங்க வேண்டும். சமைக்கும் போது தான் நறுக்க வேண்டும். முன்பே நறுக்கி வைத்தால் சாயம் வடியும். காலையில் சமைக்க இரவில் தண்ணீர் தெளித்து வைத்தால் பசுமையாக இருக்கும். வாங்கியதும் இலைகளை தனியே பிரித்து வைக்கவும். உடனே கழுவாமல் இலையையும், காயையும் தனித்தனி பையில் போட்டு வைக்கவும். இலைகளை ஒன்றிரண்டு நாளில் சமைத்து விடவும். ஆனால் காயை பிளாஸ்டிக் பையில் போட்டால் இரண்டு வாரங்கள் கூட இருக்கும். அமெரிக்காவில் டின்னில் அடைத்த பீட்ரூட்தான் பிரபலம்.

சமைப்பது எப்படி?

பீட்ரூட்டின்மேல் காம்பைக் கொஞ்சமாக வெட்டி, நன்றாக கழுவி தோலை நறுக்காமல் சமைக்க வேண்டும். பெரிய துண்டுகளாக போட்டால் சத்து வீணாகாது. ஆவியில் வேகவைப்பதும் சிறந்தது. இதைப் பச்சையாகவோ, வேக வைத்தோபயன்படுத்தும்போது வினிகர் அல்லது எலுமிச்சை ஜுஸ் தடவினால் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்.

உணவுச்சத்து:

பீட்ரூட்டில் நிறைய உணவுச் சத்துகள் உண்டு. விட்டமின் சி, பொட்டாசியம்,ஃபோலாசின், பீட்டா கரோட்டின், மாவுச்சத்து, இரும்புச் சத்து இதில் அதிகம் உள்ளன. பீட்ரூட்டில் என்னென்ன சத்துக்கள் உண்டோ, அத்தனையும் அதன் இலைகளிலும் இருப்பதுதான் இதன் விசேஷம். இலைகளை பொடியாக நறுக்க வேண்டாம். அதிலிருக்கும் விட்டமின் சி அழிந்துவிடும். வேகும் போது மூடி போட்டு வேகவிட வேண்டாம். ஏனெனில், இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் ஆவியாக வெளியேற வேண்டும். அப்போது இலைகளிலுள்ள அதிகமான சுண்ணாம்புச் சத்தை உடல்கிரகிப்பதைத் தடுக்க முடியும்.

ஒரு கப் நறுக்கிய பீட்ரூட்டில் உள்ள உணவுச் சத்து:
கலோரி 44, மாவுச்சத்து 10 கிராம், புரதம் ஒரு கிராம், நார்ச்சத்து 5 கிராம், விட்டமின் சி 11 மில்லி கிராம், சோடியம் 72 மி.கி, ஃபோலாசின் 93 மைக்ரோ கிராம்.

மருத்துவப் பலன்கள்:

பீட்ரூட்டில் இருக்கும் முக்கியமான தன்மை இதில் கொழுப்புச் சத்து கிடையாது. இதை ஒரு காலத்தில் ஐரோப்பாவில் புற்றுநோய்த் தடுப்பாக பயன்படுத்தினார்கள். இதன் சிவப்பு வண்ணத்தில் (பீட்டா கரோட்டின்) புற்றுநோய் தடுப்புத் தன்மை சேர்ந்திருப்பதால்புற்றுநோயுடன் போராடும் சக்தி உள்ளது. மேலும் பீட்ரூட் நமது உடலின் ஆக்ஸிஜன் உறிஞ்சும் சக்தியை அதிகரிக்கிறது. இதே சிவப்பு நிறத்தில் ஃபோலாசின், பீட்டா கரோட்டின் இருப்பதால், பெண்களின் உடல்நலத்துக்கு மிகச் சிறந்தது. முக்கியமாக கருத்தரிக்கும் பெண்களுக்கு தேவையான சத்துகள் நிறைய இருக்கின்றன.

சமையல் வகைகள்:

பீட்ரூட் சூப்: தேவையான பொருள்கள்: சின்ன பீட்ரூட் 2, சிவப்பு முட்டைக்கோஸ் 1 கப், வெங்காயம் 1, புளிப்பு ஆப்பிள் 1, ஆலிவ் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், தக்காளி சாஸ் 2 டேபிள் ஸ்பூன், காரட், உருளைக்கிழங்கு வேகவைத்த தண்ணீர் அல்லது சிக்கன்வேகவைத்த தண்ணீர் 1 கப், தயிர் 100 கிராம்.

செய்முறை: எண்ணெயை சுடவைத்து வெங்காயத்தை வதக்கி, ஆப்பிள், கோஸ், பீட்ரூட் எல்லாவற்றையும் நறுக்கி தக்காளிச்சாறு, வேகவைத்த காய்கறி தண்ணீர் சேர்த்து மூடி வைத்துக் கொதிக்கவிட வும். கொதித்ததும் பத்து நிமிடங்கள் தீயைக் குறைத்து விடவும்.தேவைப்பட்டால் மிளகுப்பொடி சேர்த்து சூடாகவோ, ஜில்லென்றோ சாப்பிடலாம்.

பீட்ரூட் அல்வா: தேவையான பொருள்கள்: ஒரு பெரிய அளவு பீட்ரூட், கால் டம்ளர் பால், சர்க்கரை 50 கிராம் (ருசிக்கேற்ப சர்க்கரையைக் கூட்டி குறைத்துக் கொள்ளலாம். நெய் 25 கிராம், முந்திரி, உலர்ந்த திராட்சை தலா ஐந்து.
செய்முறை: பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும். அதை பாலில் வேக விடவும். பீட்ரூட் வெந்து பால் ஈர்த்துக் கொண்டதும் அதில் சர்க்கரையைச் சேர்த்து கிளறவும். பீட்ரூட் அல்வா பதத்துக்கு வெந்ததும் நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து போடவும். நன்றாகக் கிளறி இறக்கவும்.

சத்துக்கள்

பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.

"அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணத்தை அருளாமல் இறக்குவதில்லை" என்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி 5678..

அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள்! அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல் இறக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உஸாமா பின் ஷரீக் (ரரி), நூல் : திர்மிதீ (1961), அபூதாவூத் (3357)

எனது மனமார்ந்த நன்றிகள் : இதனை தொகுத்து பதிவிட உதவிய அனைத்து இணைய தளங்களுக்கும்

அன்புடன்
தக்கலை கவுஸ் முஹம்மத்

See More
Image may contain: shoes
சுபா ஆனந்தி is with அருண் சேர்மதி.

தொப்பை குறைய எளிய பயிற்சி..!

இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும...் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.

அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.

செய்முறை:

முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.

அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும்.

See More
Image may contain: plant, flower, nature and outdoor
இயற்கை உணவும் நோயற்ற வாழ்வும்

இன்று ஒரு தகவல்:- 19.09.2013.

மூலிகையின் பெயர் -: எலும்பொட்டி.

தாவரப்பெயர் :– ORMOCARPUM COCHINCHINCENSE.

...

தாவரக்குடும்பம் :– FABACEAE..

பயன்தரும் பாகங்கள் :– சமூலம்.

வளரியல்பு :– எலும்பொட்டி செடி வகையைச் சேர்ந்தது. இது வளமான மண்ணில் நன்கு வளரும். மிதமான சீதோஸ்ணம் போதுமானது. இது பற்றி பழங்காலத்தில் கிராமங்களில் எலும்பு முறிவை குணமாக்கும் என்று தெறிந்து வைத்து அதை இரகசியமாக வைத்திருந்தனர். இந்தச் செடி எப்போதும் பச்சையாக இருக்கும். இது 6 அடி முதல் 9 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் தண்டுகள் முதிர்ந்தால் கெட்டியாகிவிடும். இதன் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். அவை 9 – 17 இணுக்குகள் இருக்கும். இலை 1.5 சி எம்.முதல் 2.5 சி.எம் நீளம் இருக்கும். இவைகள் முதிர்ந்து பழுத்தால் கருப்பாக இருக்கும். பூக்கள் மஞ்சள் அல்லது வெண்மையாக இருக்கும். பூக்கள் வாடினால் பசை போன்று இருக்கும். இதில் கால்ச்சியம் அதிகமாக இருக்கும். விதைகள் ஓவல் வடிவத்தில் பிரவுன் நிறத்தில் இருக்கும்.ஜூன் முதல் செப்டம்பர் மாதத்தில் பூக்கும். விதை அக்டோபர் மாதத்தில் எடுக்க வேண்டும் இது தாய்வான், இந்தியா, ஜப்பான், மலேசியா, பசிபிக் தீவவுகள், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து, சீனா மற்றும் வியட்னாமில் காணப்படும். இது விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள் :– எலும்பொட்டி செடியில் கால்சியம் அதிகமாக இருப்பதை தற்போது கண்டறிந்துள்ளார்கள். அதை எலிகளுக்குக் கொடுத்து அதன் எலும்பு முறிவை விரைவில் குணமாவதைக் கண்டரிந்தார்கள். அந்தக் காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் இதன் இலையை நன்கு அரைத்து அதை அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டி விரைவில் குணமாவதைக் கண்டறிந்தனர். இதை இரகசியமாக வவைத்திருந்தனர். இதனால் இதற்குக் காரணப்பெயராக அமைந்தது. இதன் சமூலத்தில் சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீர் விட்டு நன்கு சுண்ட வைத்து அதன் ‘எக்ஸ்ட்ராக்’ எடுத்து வடிகட்டி, அதில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையில் கலந்து பாட்டிலில் வைத்துக் கொண்டு எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் இரு லேசான மூங்கில் தப்பையில் வெள்ளைத் துணிசுத்தி கட்டுப்போடுவார்கள். பின் அதன் மீது இந்த மருந்தை நனைத்துக் கொண்டிருப்பர். இப்படி செய்யும் போது ஒரு சில மாதங்களில் அடிபட்ட இடம் குணமடைந்து விடும். இது கேராளாவில் முட்டிகுளக்கரையில் செய்து வருகிறார்கள்.

See More
Image may contain: outdoor
தஞ்சை தேவா

அகத்திக் கீரையில் 73 விழுக்காடு நீரும் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும் 2.1 விழுக்காடு தாதுப்புக்களும் இருக்கின்றன. இதில் 2.2 விழுக்காடு நார்ச்...சத்தும் இருக்கிறது. மாவுச்சத்து 11.8 விழுக்காடு இந்தக் கீரையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இக்கீரையில் அடங்கியுள்ள புரதச்சத்து மிகச்சிறந்த புரமாகக் கருதப்படுகிறது. சுண்ணாம்புச்சத்து இக்கீரையில் அதிக அளவில் உள்ளது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

அகத்திக்கீரை பொதுவாக சிறு கசப்பு சுவையுடையது. இக்கசப்புச் சுவை குடலில் உண்டாகும் நச்சு நீர்களை முறித்து வெளியேற்றும் குணமுடையது; குடலில் தேங்கும் மலம் மற்றும் நிணநீர் ஆகிய அசுத்தங்களைச் சுத்தம் செய்யும் ஆற்றல் பெற்றது மலர்ச்சிக்கலை நீக்கி மலத்தை உடைத்து வெளியேற்றும் தன்மை பெற்றது.

இக்கசப்புச் சுவை பித்தச் சூட்டையும் தணிக்க வல்லது. குடல்புண், அ¡¢ப்பு, சொறிசிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உணவாக உண்பதால் குணமாகும். தொண்டைப் புண் மற்றும் தொண்டைவலிக்கு அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் நீங்கும்.

பீடி,சிகரெட், சுருட்டு, உக்கா ஆகியவற்றை பிடிப்பதால் உண்டாகின்ற விஷ சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும் சூட்டையும் இது அகற்றும்.

See More