Photos
Posts

Moto Racing 3D super free game (now only on play store):-

Moto Racing 3D is a fabulous racing game you can find in play store now. You really have to put your hands on this game to believe how immense the racing experience one can have. Unlike other racing games, it has several features such as,

LIFE LIKE DRIVING EXPERIENCE

...

You will have a real world bike mechanics, gear shifting, wheel balancing, driver adjusting to left and right movements etc. The bike engine is throttled by applying real-world torque based on how long you press the gas pedal. The braking is an excellent system, you will see closer to reality.

REAL TRAFFIC

The AI based system, specifically designed and tested with several age groups provide the incoming and outgoing traffic for everyone to feel the real road experience with the game. The vehicles are chosen to provide the real world experience on the tracks, you can find police cars, schools vans, trucks, buses etc.

TERRAINS

You will be treated with the best terrain driving experiences, you will find city roads, townships and bridges on water bodies. The game presents endless tracks that you can keep playing for hours and hours.

CORNERING AND BIKE SHIFTING

Now, you can corner the road curves and perform bike shifting and wheeling in most fun ways.

FIVE DIFFERENT BIKES

You have bikes starting from 150 CC engines to 650 CC engines, broadly covering commuter bikes, sports bikes, sports tourer and super bikes as you upgrade your racing skills.

UPGRADE SYSTEM

You can upgrade your bikes,wheels (which provides better handling, braking based on wheel sizes), and shifting system.

https://play.google.com/store/apps/details…

See More

Sidhdhargal History in Tamil

சித்தர்கள்! இவர்கள் கற்கால விஞ்ஞானிகள். இன்று வரையில் அனைவருக்கும் புரியாத புதிராக விளங்கும் உத்தமர்கள். எல்லாக் கேள்விகளுக்கும் விடை தெரிந்த மகாத்மாக்கள். இறைவனுக்கு அடுத்த படியில் இருப்பவர்கள். இறைவனாக வணங்கப் படுபவர்கள். எல்லா உயிர்களையும் ஒன்றாக பாவிக்கும் நல் மனம் படைத்தவர்கள். இவர்கள் எண்ணிக்கை மொத்தம் பதினெட்டு என்று அறியப்படுகிறது.

இவர்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையையும் ஆராய்ந்து, அவர்களது வாழ்க்கை குறிப்புகளை தொகுத்து வரலாறாய் டிஜிட்டல் முறையி...ல் வழங்கியுள்ளோம். இந்த இலவசப் பயன்பாட்டை அனைவரும் உங்கள் கைப்பேசியில் படித்து மகிழும் படியாகக் கேட்டுக் கொள்கிறோம். மனப் பித்தத்தை போக்கும் சித்தர்களின் அருள் அனைவருக்கும் இதன் மூலம் கிட்டட்டும்.

See More
Posts

Kids Zen Stories in Tamil

ஜென் ஒரு எளிமையான தத்துவம். யாரும் அதை தெரியும் என்று சொன்னாலும் அல்லது தெரியாது என்று சொன்னாலும் அவ்விரண்டுமே பொய்யாகத்தான் இருக்கும். ஜென் என்பது ஒரு கொள்கையோ, தத்துவமோ, கோட்பாடோ அல்ல. அது உங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் அற்புதக் கலை.

அதன் அடிப்படையில் உங்களுக்குள் இருக்கும் ஞானத்தை தட்டி எழுப்பும் விதமாக சில ஜென் குருமார்களின் கதைகளை இந்தப் பயன்பாட்டில் கொடுத்து உள்ளோம். இந்தக் கதைகள் அனைத்தும் உங்களை ஜென் தத்துவத்துக்குள் கொண்டு செல்லும். அத்...துடன் நிச்சயம் உங்கள் ஆழ் மனதில் ஒரு வித அமைதியையும் ஏற்படுத்தித் தரும். அவசியம் அனைவரும் இந்தக் கதைகளை உங்கள் கைப்பேசியில் படித்து மகிழுங்கள். அத்துடன் உங்களது பொன்னான கருத்துக்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

See More

Thenali Raman Stories in Tamil

விகடகவி என்று போற்றப்பட்ட தெனாலி ராமனின் சுவை மிகுந்த கதைகளை தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். தெனாலிராமன் (கி.பி.1509 - கி.பி.1529 ) என்பவர் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப்புலவர்களுள் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவர். அகடவிகட கோமாளித் தனங்களில் தான் அவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன.

இவருடைய ஊருக்கு வந்த துறவி ஒருவர் இவருடைய தைரியம் மற்றும் நகைச்சுவை உணர்வில் கவரப்பட்டு காளிதேவியிடம் வரம் பெறத்தக்க மந்திரம் ஒன்ற...ை சொல்லித் தந்ததாகவும் அதன் அருளால் காளி தேவியின் தரிசனம் பெற்ற தெனாலிராமன் அவளையும் தன் நகைச்சுவை அறிவால் சிரிக்க வைத்து அவளாலேயே விகடகவி என்று வாழ்த்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

பிற்பாடு காளியின் அறிவுரைப்படி விஜயநகரம் சென்று தன்னுடைய சாமர்த்தியத்தால் அரச தரிசனம் பெற்று தன் அறிவுக் கூர்மை மற்றும் நகைச்சுவையால் அரசரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி அரசவையில் முக்கிய இடம் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தார்.

கிருஷ்ண தேவராயருக்கும், இவருக்கும் இடையே நடந்த பல வேடிக்கை சம்பவங்கள் இன்றும் கூடக் கதைகளாகப் பேசப்பட்டு வருகிறது. அவை நகைச்சுவை கலந்து கூறப்படுவதால் நூற்றாண்டுகள் கடந்தும் இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அவற்றைத் தான் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். இதனைப் பதிவிறக்கம் செய்து சிரித்து மகிழுங்கள். உடன் உங்கள் கருத்துக்களையும் நட்சத்திரக் குறியீட்டுடன் சொல்ல மறந்து விடாதீர்கள்.

https://play.google.com/store/apps/details…

See More

Sidhdha Medicine in Tamil

'உடலை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே!' என்னும் திருமூலர் வாக்கை மெய்ப்பியுங்கள். வாழ்க தமிழ். வளர்க சித்த மருத்துவம்.

ஆங்கிலத்தில் குணமாகாத பல நோய்களை பக்க விளைவுகள் இன்றி நமது சித்த மருத்துவத்தில் குணமாக்க முடியும் என்பது அண்மைக் காலங்களில் மெல்ல உணர்த்தப்பட்டு வருகிறது. சித்த மருத்துவம் பக்க விளைவுகள் இல்லாததது. எப்படிப் பட்ட நோய்களையும் தீர்க்கவல்லது. இது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கும் தமிழ் மருத்துவ முறையாகும். இன்றைய வளர்ந்த நாடுகளில் மக்கள் ஒ...ரு காலத்தில் காட்டு வாசிகளாய் வேட்டை ஆடித் திரிந்த காலத்தில் நமது தமிழ் சித்தர்கள் கண்ட நாகரிக மருத்துவம் தான் இந்தச் சித்த மருத்துவம். இப்படிப் பட்ட சித்த மருத்துவ நூல்களைப் பின்பற்றி சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் குறிப்புகளை நாங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற சிந்தனையைக் கொண்ட ஒவ்வொரு சராசரி மனிதனின் கைப்பேசியிலும் அவசியம் இருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள் இவை. உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் இதன் மூலம் நோய்கள் வரும் முன்னர் உடலைக் காத்துக் கொள்ளுங்கள்.

https://play.google.com/store/apps/details…

See More

Jeyakandhan Stories in Tamil

ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015) சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவரது சிறு கதைகளை நாங்கள் தொகுத்து வழங்குவதில் மிகவும் பெருமை கொள்கிறோம். இந்தக் கதைகளை உங்கள் கைப்பேசியில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படித்துப் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதில் உள்ள ஒவ்வொரு சிறுகதைகளிலும் சமூகப் பிரச்சனைகளை மிக அழகாகவும், நேர்த்தியாகவும் எடு...த்துக் கூறியுள்ளார் ஜெயகாந்தன்.

வாசகர்கள் இந்தக் கதைகளை வாசிக்கத் தொடங்கினால் நிச்சயம் நேரம் போவதே தெரியாது. இதில் உள்ள கதாபாத்திரங்கள் சில நமது அன்றாட வாழ்க்கையில் கூட நிஜமாக நடமாடிக் கொண்டு இருக்கலாம். படித்துப் பாருங்கள் ஒவ்வொரு கதைகளிலும் ஒரு ஜீவன் மறைந்து உள்ளதை வாசகர்களாகிய நீங்களும் உணருவீர்கள்.

https://play.google.com/store/apps/details…

See More

Lord Murugan Pooja

இன்றைய அவசர யுகத்தில் பூஜை செய்ய விருப்பம் இருந்தும், நேரம் இல்லாமல் இருக்கின்றீர்களா? கவலை வேண்டாம். உங்கள் மனதில் உள்ள அந்தக் கவலையை போக்கத...் தான் நாங்கள் இந்த இலவச செயலியை வடிவமைத்து கொடுத்து உள்ளோம். நீங்கள் இந்த ஆப்பை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து உங்கள் விருப்பம் போல முருகப் பெருமானுக்கு பூஜைகள் செய்து அவரது அருளைப் பெறுங்கள்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

https://play.google.com/store/apps/details…

See More

Lord Murugan Pooja

இன்றைய அவசர யுகத்தில் பூஜை செய்ய விருப்பம் இருந்தும், நேரம் இல்லாமல் இருக்கின்றீர்களா? கவலை வேண்டாம். உங்கள் மனதில் உள்ள அந்தக் கவலையை போக்கத் தான் நாங்கள் இந்த இலவச செயலியை வடிவமைத்து கொடுத்து உள்ளோம். நீங்கள் இந்த ஆப்பை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து உங்கள் விருப்பம் போல முருகப் பெருமானுக்கு பூஜைகள் செய்து அவரது அருளைப் பெறுங்கள்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

... See More

Kalvanin Kadali - Kalki Tamil

ஆனந்த விகடனில் எழுத்தாளர் கல்கி ஆசிரியராக இருந்த காலத்தில் அவர் எழுதிய முதல் தொடர் நாவல் தான் இந்தக் 'கள்வனின் காதலி'. அக்காலத்தில் ஆனந்த விகடனில் இது தொடர்கதையாக வெளிவந்து தமிழ் வாசகர்கள் பலரின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. பிற்காலத்தில் இந்த நாவல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு 1955 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி வெளிவந்தது. அத்திரைப்படத்தில் சிவாஜி கணேசனும், பானுமதியும் நடித்தனர். ஆனால், அதற்கு முன்னமே கல்கி காலமாகி விட்டது தான் சோகம்.

எனினு...ம், நமக்கு ஒரு அற்புதமான கதையை விருந்தாக்கி உள்ளார் அமரர் கல்கி. இதனை கல்கியின் ரசிகர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் அளிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும், இதனை இறைவன் எங்களுக்கு அளித்த ஒரு அற்புத வாய்ப்பாகவும் கருதுகிறோம்.

See More

Ponniyin Selvan (Kalki) Tamil

Now you can read the novel in Landscape Mode as well, also you can swipe down to access the menu, swipe left & right to turn the pages.

உங்களில் எத்தனை பேருக்கு ஒரு கணம் சோழ நாடு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. சோழ நாடு என்றால் இன்று தமிழகத்தில் இருக்கும் இந்தக் கால சோழ நாடு அல்ல. நான் சொல்வது கி.பி. 1000 ஆம் ஆண்டு காலம். வரலாற்றின் பொன்னான காலம். யானை கட்டி நிலத்தை உழுத காலம். அந்தக் காலத்தை பார்க்க ஆசையாக இருந்தால், உடனே இந்த அற்புதப் புதினத்தை... உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படியுங்கள். சோழ நாட்டில் சென்று உலவுவது போல உணர்வீர்கள். அந்தக் கால கட்டத்திற்கே கல்கி உங்களை அழைத்துச் சென்றுவிடுவார்.

அவ்வளவு நேர்த்தியான எழுத்துக்களை இதுவரையில் எந்த ஒரு எழுத்தாளனாலும் தந்திருக்க முடியாது. கல்கி ஒருவரால் மட்டுமே இது சாத்தியம் ஆனது. மூன்று முறை இந்தப் புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நூலைப் படிக்கும் போதே இக்கதையின் கதா பாத்திரங்களான வந்தியத் தேவன், குந்தவை, அருள்மொழிவர்மன், சுந்தர சோழர், நந்தினி, ஆழ்வார்க்கடியான் நம்பி, அநிருத்தப் பிரம்மராயர், வானதி, பெரிய பழுவேட்டரையர், சின்னப் பழுவேட்டரையர், செம்பியன் மாதேவி, ஆதித்த கரிகாலன் என அனைவரும் உங்கள் அருகிலேயே வளம் வருவதைப் போல வாசகர்களாகிய நீங்கள் நிச்சயம் உணவீர்கள். படிக்கப் படிக்க திகட்டாத நூல் இது. இதனை ஐம்பது முறை கூட படித்தவர்கள் உண்டு.

இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்கும் சமயத்தில் சீக்கிரம் இந்தக்கதை முடிந்து விடக் கூடாது என்று ஏங்குவீர்கள். அனைவரும் பதிவிறக்கம் செய்து படித்துப் பயன் பெற வேண்டிய இந்த வரலாற்று புதினத்தை நாங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் அதுவும் உங்கள் கைப்பேசியிலேயே பதிவிறக்கம் செய்து படிக்கும் படியாக கொடுத்தமைக்குப் பெருமைப்படுகிறோம். படியுங்கள், புதியதொரு உலகத்துக்கு சென்று வாருங்கள்.

https://play.google.com/store/apps/details…

See More

Basic Electronics in Tamil

பொறியியல் மாணவர்களுக்கான அடிப்படை மின்னணுவியல் பாடத்தை மிகுந்த உற்சாகத்துடன் நாங்கள் வழங்குவதில் பெருமை அடைகிறோம். இது மின்னணு பாடத்தை மாணவர்கள் அற்புதமாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் முழுமையாகத் தரப் பட்டு உள்ளது. அனைத்து துறையை சேர்ந்த பொறியியல் மாணவர்களும் கூட இதனைப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் போதும். உங்களுக்கு இது நான்கு ஆண்டுகள் பொறியியல் கல்வி முடியும் வரையில் கூட எண்ணற்ற விதங்களில் உதவலாம்.

அதிலும் குறிப்பாக இதனைப் படித்தாலே நீங்க...ள் செய்முறை தேர்வில் வரும் viva (பத்து மதிப்பெண்ணைக் கொண்ட வாய் மொழித் தேர்வு) வில் முழு மதிப்பெண்ணையும் பெற்று விடலாம். அதனை மனதில் கொண்டும் இந்தச் செயலியை நாங்கள் வடிவமைத்துத் தந்து உள்ளோம். நிச்சயம் இது மாணவர்களுக்கான வரப் பிரசாதமாக இருக்கும். அனைவரும் இதனை பதிவிறக்கம் செய்வீர், பயன் அடைவீர்.

See More

Tamil Kadi Jokes (கடி ஜோக்ஸ்)

நகைச்சுவை மனிதனை விலங்குகளிடம் இருந்து வேறு படுத்திக் காட்டும் ஒரு அற்புத உணர்வு. "இடுக்கண் வருங்கால் நகுக " என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அதாவது துன்ப காலங்களில் சிரித்துப் பழகச் சொல்கிறார் வள்ளுவர். எத்தனை பேருக்கு இது சாத்தியம்? சத்தியமாய் சித்தனாலும் முடியாத காரியம் என்று தோன்றலாம் சிலருக்கு. ஆனால், உண்மை அதுவல்ல. நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் உங்களை சிரிக்க வைக்கும் நோக்கத்தில் தான் நாங்கள் இந்தச் செயலியை வடிவமைத்து கொடுத்து உள்ளோம...்.

திறந்த மனதுடன் பதிவிறக்கம் செய்யும் அனைவரயும் சிரிக்க வைக்கும் தன்மை கொண்டது இந்தச் செயலி. இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து படித்தால் போதும் நரகத்தையும் சொர்க்கமாக்கி விடுவீர்கள். உங்களை அண்ட வரும் நோய் கூட அதன் பாதையில் விலகிச் செல்லும். ஆக, இன்னும் ஏன் தாமதம்? உடனே இந்த அற்புதச் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் அதன் மூலம் இறுக்கமான சூழ் நிலையில் இருந்து இப்போதே வெளியில் வாருங்கள்.

https://play.google.com/store/apps/details…

See More

Vikramathithan Stories Tamil

புகழ் பெற்ற பாரத தேசத்தில் படிக்கப் படிக்க திகட்டாத எண்ணற்ற விசித்திரக் கதைகள் உலாவி வருகின்றன. அவைகள் காலத்தால் அழியாதவை. கேட்கக், கேட்க திகட்டாதவை. வர்ணிக்க முடியாதவை. அந்த வரிசையில் வருவது தான் நமது விக்கிரமாதித்தன் கதை. இது பல கிளைக் கதைகளைக் கொண்டது. அரபு தேசத்தில் ஆயிரத்து ஓர் இரவுகள் எப்படியோ அதே போலத் தான் நமது பாரத தேசத்தில் இந்த விக்கிரமாதித்தன் கதை.

இதனை நாங்கள் கதை வடிவில் தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இந்த அற்புதப் பயன்பாடு ...உங்கள் நேரத்தை இனிமையாகக் கழிக்க உதவும் என்றும் நாங்கள் நம்புகிறோம். படித்துப் பாருங்கள் இக்கதைகளை, இவை நீங்கள் இதுவரையில் காணாத புதியதொரு உலகத்தை உங்களுக்கு காண்பிக்கும்.

See More

Dr M G Ramachandran in Tamil

தமிழ்த் திரைப்பட உலகில் சுமார் நாற்பது ஆண்டுகள் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். திரைப்படம் என்பது மக்களுக்கு வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி அவர்களை நல்வழிப்படுத்தவும் சீர்திருத்தவும் பயன்படும் ஒரு சாதனமாக இருக்க முடியும் என்று மெய்ப்பித்தவர். அதனால் தான் திரைப்படத்தில் கூட அவர் குடிப்பது போன்றோ, புகை பிடிப்பது போன்றோ எந்த ஒரு காட்சிகளையும் பதிவு செய்ய அனுமதிக்கவில்லை. 'எம். ஜி. ஆர்' என்ற அந்த மூன்று எழுத்தில் மக்கள் இன்று வரையில் ...கூட தங்களது மனதையே வைத்து இருக்கின்றனர். இதனை யாரும் மறுக்க முடியாது.

இவரது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் இவர் நடித்த படங்களைப் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றை தொகுத்து வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அவசியம் எங்களது இந்தச் செயலியை உங்களது கைப்பேசியில் இலவசமாக படித்து மகிழும் படி கேட்டுக் கொள்கிறோம்.

https://play.google.com/store/apps/details…

See More
Dr M G Ramachandran in Tamil In Tamil film world, about years of end, it is the king who is the king. G. R. The film is that the people can only be a single one, not just for entertainment, and to give them a good way. That is why he is not allowed to record any views like him in the film. M. G. In that three writing, the people are still keeping their mind even till today. No one can deny this. We are proud to hosting the interesting incidents in his life and notes about the pictures he acted in. We need this app to make you read free on your mobile phone. https://play.google.com/store/apps/details?id=com.whiture.apps.tamil.mgr&hl=en
Translated

Tanneer Desam Vairamuthu Tamil

இந்த உலகத்தில் காதலிப்பது சுலபம் ஆனால் காதலிக்க வைப்பது சற்று கடினம். எனினும், வைரமுத்து என்ற அந்த ஒரு நபருக்கு மட்டும் காதலிக்க வைப்பதும் கூட சுலபம் தான். கவியரசு வைரமுத்துவை பொருத்தவரையில் அவரது எழுத்துக்களை காதலிக்காத வாசகர்களே இல்லை. இவர் எழுதும் கவிதையோ, கதையோ சாமான்யமான மனிதனைக் கூட கவிஞனாக்கும் தன்மை கொண்டது.

அந்த வகையில் 'தண்ணீர் தேசம்' என்னும் இக்கதையை உண்மையில் வைரமுத்துவின் கவிதை என்று சொல்வதா? இல்லை கதை என்று சொல்வதா? எனக்குத் தெரியவ...ில்லை! ஒருவேளை வேண்டும் என்றால், இப்படிச் சொல்லிவிட்டுப் போகலாம் அதாவது இது கவிதை நடையில் எழுதப்பட்ட கதை என்று. வைரமுத்துவின் கை வண்ணத்தில் இதனைப் படிக்கும் போது அன்னாரின் கடலைப் பற்றிய அறிவியல் பார்வையும் காதல் பார்வையும் கலந்த வரிகள் அனைத்தும் வாசகர்களின் நெஞ்சங்களை பல முறை கொள்ளை கொள்ளும் என்பது மட்டும் உறுதி. இந்தத் தண்ணீர் தேசத்துக்குள் நுழைந்து வைரமுத்துவின் கவிதைப் படகில் ஒரு நான்கு மணிநேரம் மிதந்து பின்னர் கரை சேருமாறு வாசகர்களை வேண்டுகிறேன். அவசியம் அனைவரும் இதனைப் பதிவிறக்கம் செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

See More

Beauty Tips in Tamil

'அழகு என்பது உருவத்தில் அல்ல அது பார்க்கும் கண்களில் உள்ளது' என்று ஒரு வார்த்தைக்கு வேண்டுமானால் கூறலாம். ஆனால், உலகத்தில் இருப்பவர்கள் அனைவருமே அழகைத் தான் ஆராதிக்கிறார்கள். அந்த அழகு கருப்பர்கள், வெள்ளையர்கள் என்ற வித்யாசம் இன்றி எல்லோரிடமும் ஏதோ ஒரு விதத்தில் ஒளிந்து உள்ளது. ஆனால், நமக்குத் தான் அது தெரிவதில்லை. அதனை எப்படி வெளிக் கொணர்வது என்று புரியவில்லை. அப்புரியாத விஷயத்தை புரிய வைக்கும் நோக்கத்தில் இதோ இலவசமாக அளிக்கிறோம் நீங்கள் இது நாள் வரையில்... ஆவலுடன் தேடிக் கொண்டு இருந்த அழகுக் குறிப்புகளை.

இது உங்களை புதிய மனிதனாக உங்களுக்கே அடையாளம் காட்டக் கூடியது. ஆண், பெண் இருபாலருக்கும் பயன்படக்கூடியது. உங்கள் வாழ்க்கையை மாற்றக் கூடியது. படியுங்கள் இப்போது புதிய பரிமாணத்தில் கீழ்க்கண்ட அம்சங்களுடன் முற்றிலும் வித்யாசமாக.
எங்களது அழகுக் குறிப்புகளில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு:-

1. அழகுப் பொருட்களை பயன்படுத்தும் முறை:-

உங்கள் சரும அழகை மேம்படுத்த நீங்கள் அறிந்தும் அறிந்திராத பெரும்பான்மையான அழகு மூலிகைகளையும் அவற்றைப் பயன் படுத்தும் முறைகளையும் கொடுத்து உள்ளோம். இதில் அழகுக் கட்டுரைகளும் உள்ளது இதன் இன்னொரு சிறப்பம்சம் ஆகும்.

2. உங்கள் அங்கங்களை மெருகூட்ட எண்ணற்ற வழிமுறைகள்:-

உங்கள் அங்கங்களில் கால மாற்றத்தால் ஏற்படும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் எளிய முறையில் தீர்வுகளை கொடுத்து உள்ளோம். அத்தனையும் இயற்கை நமக்கு அளித்த பொக்கிஷம். இன்னும் சொல்லப் போனால் அழகு மூலிகைகள் பல வற்றின் விவரத்தை கொண்ட அஞ்சறைப் பெட்டி இது.

3. உங்களுக்கு தேவையான அழகுக் குறிப்புகளை எளிதில் தேடி அறியலாம்:-

பயனாளர்கள் அனைவரது வசதிக்காகவும் உங்களது பிரச்சனைகளை ஒரு சில கடவுச் சொற்களை (key words) பயன்படுத்துவதன் மூலம் இப்போது எளிதில் தேடி அறியலாம். அதற்கான வசதியும் இதில் உள்ளது. சுருங்கச் சொன்னால் சிறிய வரிகளில் உங்களது பெரிய பிரச்சனைகளுக்கான தீர்வுகள் இதில் உள்ளது.

4. அழகுக் குறிப்புகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து ஆனந்தம் கொள்ளும் வசதி:-

தாங்கள் பெற்ற இன்பம் அனைவருக்கும் பரவ வேண்டாமா? குறைந்த பட்சம் உங்கள் நண்பர்களுக்காவது சொல்ல வேண்டாமா? அதனைக் கருத்தில் கொண்டு உங்களுக்கு பிடித்த அல்லது நீங்கள் முக்கியமாகக் கருதும் அழகுக் குறிப்புகளை உங்களது நண்பர்களுடன் சமூக வலை தளங்கள் உட்பட அனைத்திலும் கண்ணைக் கவரும் வண்ணப் படங்களுடன் பகிர்ந்து மகிழலாம். அதற்கும் இதில் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

5. உங்களது கருத்துக்களை சொல்ல மற்றும் எங்களை எளிதில் தொடர்பு கொள்ள:-

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு அல்லவா? அதன் அடிப்படையில் நீங்கள் உங்கள் கருத்துக்களை பதிவு செய்து எங்களுக்கு அனுப்பவும். உங்களது பேரான பெரும் ஆதரவை எங்களுக்கு தெரிவிக்கவும் அத்துடன் உங்களது எதிர்பார்ப்புகளை எங்களுக்கு அறிவிக்கவும், எங்களது எதிர்கால படைப்புகளை உடனுக்குடன் அறியவும் இதில் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது.
இன்னும் ஏன் தாமதம்? இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள் படித்து மகிழுங்கள்.

https://play.google.com/store/apps/details…

See More

Swami Kirubananda Variyar

திருமுருக கிருபானந்த வாரியார் தலை சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளர். எழுத்தாய், குரலாய் இன்றுவரை வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டு இருப்பவர். நாத்திக சிந்தனைகளுக்கு சொல்லால் சவுக்கடி கொடுத்தவர். இவ்வளவு ஏன்? நாத்திக கொள்கைகளை பரப்பிய பெரியாரும் கூட வாரியாரை ஒரு முறை பாராட்டிய அந்த வரலாறும் உண்டு. எண்ணற்ற திருப்பணிகளை எடுத்துச் செய்துள்ளார் இவர்.

இப்படிப் பட்ட ஒரு உத்தமரின் வாழ்வியல் சிந்தனைகளையும், பேச்சுக்களையும், கதைகளையும், வாழ்க்கை வரலாற்றையும் ஒரு தொகுப்பாய்... நாங்கள் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். அவசியம் அனைவரும் இதனைப் படித்துப் பாருங்கள். வாரியாருடன் சில நேரம் கழித்த அனுபவம் உங்களுக்கு நிச்சயம் ஏற்படும்.

See More